25 பள்ளிகள், ஒரு கோடி சம்பள மோசடி – நிஜ அனாமிகா யார் தெரியுமா..?

0
Elementary-Teacher3
Elementary-Teacher3

ஒரே நேரத்தில் பல்வேறு பள்ளிகளில் பணியாற்றி மோசடி நடந்த சம்பவத்தில் உண்மையான அனாமிகாவின் சோக நிலை பற்றி தெரியவந்துள்ளது.

கஸ்தூரிபா காந்தி பள்ளி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசின் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இது நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த பெண் குழந்தைகளுக்காக ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு கோட்டத்திற்கும் ஒரு பள்ளி என்று மொத்தம் 746 பள்ளிகள் உள்ளன. சமீபத்தில் 25 கஸ்தூரிபா காந்தி பள்ளிகளில் ஒரே நேரத்தில் பணியாற்றியதாக கணக்கு காட்டி 13 மாதங்களில் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக பெறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சிக்கிய பெண்ணின் பெயர் அனாமிகா சுக்லா என்று தெரியவந்தது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

kasturi bhai school
kasturi bhai school

25 பள்ளிகளிலும் அனாமிகா பெயரில் ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு தவறாமல் வருகைப் பதிவேட்டிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சிக்கிய பெண்ணை விசாரிக்கையில் அவரது பெயர் அனாமிகா இல்லை பிரியா என்று தெரியவந்தது.

அனாமிகா

அப்படியெனில் ஒரேவொரு போலி அனாமிகா தான் சிக்கியிருக்கிறார். எஞ்சிய 24 அனாமிகாக்கள் எங்குள்ளனர் என்று விசாரணை தீவிரமடைந்தது. இந்த சூழலில் பெண் ஒருவர் கொண்டாவில் உள்ள சிக்‌ஷா அதிகாரியை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார். அதாவது உண்மையான அனாமிகா சுக்லா நான் தான்.

ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் ஒர்க் – 1 கோடி சம்பளம் பெற்ற பலே டீச்சர்..!

எனது கல்வி சான்றிதழ்களை பலர் முறைகேடாக பயன்படுத்தி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இவரது புகாரில் சுல்தான்பூர், ஜவுன்பூர், லக்னோ, பஸ்தி, மிர்சாபூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள கஸ்தூரிபா காந்தி பள்ளிகளில் அறிவியல் ஆசிரியர் பணிக்கு கடந்த 2017ஆம் ஆண்டு விண்ணப்பித்தேன். ஆனால் எந்தவொரு பள்ளியிலும் இறுதி சுற்றுக்கு தேர்வாகவில்லை. அதேசமயம் தனது ஆவணங்களை திரும்ப பெற்றுக் கொள்ளவில்லை. இதன்மூலம் தான் மோசடி நடந்துள்ளது. நான் எந்தவொரு பள்ளியிலும் தற்போது வேலை செய்யவில்லை.

up-teacher
up-teacher

டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் வெளியான செய்தியை பார்த்து தான் ஓடி வந்துள்ளதாக தெரிவித்தார். இவர் அளித்த ஆவணங்களின் படி, கொண்டாவில் பிறந்து அங்கேயே அனாமிகா சுக்லா திருமணம் செய்து கொண்டார். தொடக்கக் கல்வி முதல் பட்டம் வரை கொண்டா பகுதியிலேயே முடித்துள்ளார். இவர் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்த மொபைல் எண்ணை பலமுறை தொடர்பு கொண்டு மேலும் தகவல்களை பெறலாம் என்ற முயற்சி பலனளிக்கவில்லை. ஏனெனில் அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here