முககவசத்தால் ஏற்படும் சரும பிரச்னைகள் – சமாளிப்பது எப்படி..?

0
face mask
face mask

கொரோனா கால கட்டத்தில் தவறாமல் மாஸ்க் போடுவது கட்டாயமாகி விட்டது. இதனால் சரும பாதிப்பு ஏற்படுகிறது என்கிறார்கள் சரும நிபுணர்கள். எனவே மாஸ்க்கை எந்த வழியில் பயன்படுத்தலாம் எப்படிப்பட்ட மாஸ்க்கை தேர்ந்தெடுப்பது நல்லது என்று இங்கே காண்போம்.

முகக்கவசம்

இந்த கொரோனா கால கட்டத்தில் மாஸ்க் பயன்படுத்துவது கட்டாயமாகி வருகிறது. வெளியே செல்ல வேண்டி இருந்தாலோ, வேலைக்கு போக வேண்டிய சூழல் இருந்தாலோ நீண்ட நேரம் மாஸ்க் அணிய வேண்டியுள்ளது. இப்படி தொடர்ந்து மாஸ்க் அணிந்து வருவதால் நமக்கு பக்க விளைவுகள் உண்டாக வாய்ப்புள்ளது என்கிறார்கள் சரும மருத்துவர்கள்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

mask precautions
mask precautions

இது குறித்து தோல் மருத்துவர் மற்றும் முடி மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் கூறுகையில் மாஸ்க் முகத்திற்கு சரியாக பொருந்துவது அவசியம். இது மூக்கைச் சுற்றி இறுக்கமாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் பாதுகாப்பாக இருக்கும் படியும் பார்த்துக் கொள்ளுங்கள்.

மாஸ்க் தேர்ந்தெடுப்பது எப்படி..?

face mask precautions
face mask precautions
  • நீங்கள் வீட்டில் தயாரிக்கும் மாஸ்க்கை பயன்படுத்தினாலும் சரி சில்லறை விற்பனை செய்பவரிடம் இருந்து வாங்கினாலும் சரி மாஸ்க் துணியின் தரத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.
  • செயற்கை துணியை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்
  • எனவே பருத்தி போன்ற மென்மையான இயற்கை துணியை தேர்ந்தெடுங்கள்.
  • சருமத்திற்கு மேக்கப் பயன்படுத்தும் போது எப்படி மாஸ்க்கை பயன்படுத்துவது
  • மாஸ்க் உங்க சருமத்திற்கு எதிராக தேய்க்கும் தன்மை கொண்டது. எனவே மாஸ்க் அணியும் போது மேக்கப் செய்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. அப்பொழுது தான் உங்க சருமம் தங்கு தடையின்றி சுவாசிக்க முடியும். ஒரு வேளை நீங்கள் மேக்கப் உடன் மாஸ்க் அணியும் போது எண்ணெய்யினால் சரும துளைகள் அடைக்க வாய்ப்பு உள்ளது. இது உங்க பருக்களை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here