Saturday, May 4, 2024

கொரோனாவை கட்டுப்படுத்த டிச.1 முதல் இரவு நேர ஊரடங்கு – மாநில அரசு உத்தரவு!!

Must Read

கடந்த சில மாதங்களாக கொரோனா நாட்டில் அதிகமாக பரவி மக்களை அச்சம் அடைய வைக்கின்றது. இதற்காக தற்போது பஞ்சாப் அரசு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் இரவு நேர பொது முடக்கத்தினை அமல்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல் அச்சம்:

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து கொரோனா என்ற நோய் பரவியது. இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இறங்கியது. பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. பரவல் குறைந்து வருவதை அடுத்தும், மக்களின் சூழ்நிலையினை கருத்தில் கொண்டும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் தற்போது வரை பின்பற்றபட்டு வருகின்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் தற்போது உள்ள நிலவரப்படி 1,40,000திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,13,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது நாள் வரை மட்டும் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் அம்மாநில அரசு இரவு நேர பொது முடக்கத்தினை அமல்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. டிசம்பர் 1 ஆம் தேதி முதல் இந்த உத்தரவு செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு தொடங்கும் இந்த உத்தரவு காலை 5 மணி வரை செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படுபவர்களுக்கு 1000 ரூபாய் அபராத தொகையாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -