Friday, May 3, 2024

நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!!

Must Read

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் தொடர்ச்சியாக உயர்ந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். அதே போல் கொரோனாவால் மரணம் அடைவோர் எண்ணிக்கையும் நாட்டில் குறைந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பு:

கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக பரவ ஆரம்பித்தது. படிப்படியா உயர்ந்த கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேர் வரை தொற்று உறுதி செய்யபட்ட நிலை ஏற்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு சதவீதம் மற்றும் இதர தகவல்களை மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “இந்தியாவில் தற்போது 79,46,429 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது”

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

“பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 1,19,502 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளனர். பாதிப்பில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 72,01,070 ஆக உள்ளது. மேலும், தற்போது மருத்துவமனையில் 6,25,857 கொரோனவிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசு கொரோனவை தடுப்பதில் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது”

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

Telangana government finally gives nod to private testing of coronavirus COVID-19 | India News | Zee News

“பாதிக்கப்படுபவர்களின் விகிதத்தை விட மீண்டோர் சதவீதம் அதிகமாக உள்ளது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. ஆனால், இந்தியாவில் கேரளா, மேற்கு வங்கம், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி போன்ற பகுதிகளில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த 5 வாரங்களில் மரணம் அடைவோர் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது. இதற்கிடையில் நாட்டில் 3 தடுப்பூசிகளுக்கான சோதனைகளும் நடைபெற்று வருகின்றது” இவ்வாறாக அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

T20 உலக கோப்பை தொடருக்கான நடுவர்கள் யார் யார்? ICC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ICC சார்பாக 20 ஓவர் உலக கோப்பை தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஓர் முக்கிய தொடராகும். கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -