கொரோனா பரவல் எதிரொலி – தடுப்பு நடவடிக்கைளை கடைபிடிக்காத வணிக நிறுவனங்களுக்கு அபராதம்!!

0

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு தற்போது அதிகாரிகள் அபராதத்தை விதித்து வருகின்றனர்.

கொரோனா:

நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று எதிர்பாராத வகையில் அதிகரித்து வருகிறது. மேலும் மக்கள் அனைவரும் தற்போது கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதை மறந்து வருகின்றனர். இதனால் கொரோனா பரவல் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கடந்த சில நாட்களாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் தொற்று சற்று அதிகரித்து வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 25 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது இதனை தடுக்கும் வகையில் மாநகராட்சி கமிஷனர் மற்றும் சுகாதார அதிகாரிகள் அதிரடியாக ஓர் நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதன்படி நேற்று காலை சுகாதார அதிகாரிகள் ஆவடி நேரு பஜாரில் உள்ள புதிய ராணுவ சாலை போன்ற இடங்களில் உள்ள வணிக நிறுவனங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.அங்கு கொரோனா பாதுகாப்பு விதிமுறை கடைபிடிக்கப்படுகிறதா என்று சோதனை செய்தனர்.

தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா- மத்திய அரசு தகவல்!!

மேலும் கொரோனா நடவடிக்கையை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அதிரடியாக அபராதமும் விதித்தனர். அதிகாரிகள் அந்த நிமிடத்திலேயே அபராத தொகையை வசூல் செய்தனர். வணிக நிறுவனங்களுக்கு ரூ.7,600 வரை அபராத தொகையை விதித்தனர். சுமார் 10க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களில் அபராதத்தை விதித்துள்ளனர். இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் பொழுது மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here