தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா- மத்திய அரசு தகவல்!!

0

கடந்த சில நாட்களாகவே தமிழகம், கேரளா உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா:

கடந்த ஆண்டு இறுதியில் குறைந்து வந்த கொரோனா பரவல் தற்போது சில தினங்களாக அதிகரித்து வருகிறது. தற்போது இதுகுறித்து மத்திய அரசு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 23,285 பேருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த 24 மணி நேர்தத்தில் மட்டும் இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்புகளில் 85.6 சதவீதம் இந்த 6 மாநிலங்களில் தான் ஏற்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா 14,317 மற்றும் கேரளா 2,133 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தற்போதைய நிலவரப்படி நாட்டில் கொரோனவிற்காக 1,97,237 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இன்று காலை நிலவரப்படி இதுவரை நாட்டில் 2.61 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – இரவு நேர பொது முடக்கம் அறிவிப்பு!!

மேலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இதுவரை 60,61,034 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. நேற்று மகா சிவவராத்திரி என்பதால் சில பேர் விரதம் இருந்துள்ளனர். இதனால் நேற்று தடுப்பூசி வழங்கும் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து 1.09 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15,157 பேர் குணமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here