மாளவிகா மோஹனன் வெளியிட்ட “மசாலா” புகைப்படம் – வாய் அடைத்து போன ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகின் முக்கியமான நடிகையாக பார்க்கப்பட்டு வரும் மாளவிகா மோஹனன் தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு தனது கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

மாளவிகா மோஹனன்

கேரளாவில் இருந்து வரும் நடிகைகள் தான் பலர் இன்று தமிழ் திரையுலகினை ஆட்டி படைத்தது வருகின்றனர். அந்த வகையில் சமீப காலத்திற்கு முன்பு தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான், மாளவிகா மோஹனன்.

அவர் ஒளிப்பதிவாளர் மோஹனனின் மகள் ஆவார். சினிமா துறை பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்ததாலோ என்னமோ இவருக்கு நடிப்பு அத்துப்படி. முதன் முதலாக, தமிழில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் திரைப்படமான “பேட்ட” திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

குக் வித் கோமாளியில் அஸ்வின் எலிமினேஷனா?? கலக்கத்தில் ரசிகர்கள்!!

அந்த திரைப்படத்தில் மிகவும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், தனது தேர்ந்த நடிப்பால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து கொண்டார். இப்படியாக இருக்க “தளபதி” விஜய்யின் மாஸ்டர் படத்தில் அனைவரையும் ஈர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முன்னணி நடிகரான விஜய்யின் திரைப்படத்தில் நடித்ததால் அவர் தற்போது முக்கியமான நடிகையாக பார்க்கப்படுகிறார். அது மட்டும் அல்லாமல் மாஸ்டர் படத்தில் அவர் நடித்த காட்சிகளை வைத்து சிலர் மீம்களை உருவாக்கினர். இது குறித்து மாளவிகா கோபப்படாமல் மிகவும் ஸ்போர்ட்டிவாக எடுத்து கொண்டு மீம் உருவாக்கியவர்களை பாராட்டினார்.

மாளவிகா தனது சமூகவலைத்தளத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார். அந்த வகையில் அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது திரைப்படத்தின் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவரது அடுத்த திரைப்படம் “மசாலா” என்பதாகும். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here