குக் வித் கோமாளியில் அஸ்வின் எலிமினேஷனா?? கலக்கத்தில் ரசிகர்கள்!!

1

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த வார ப்ரோமோவில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அஷ்வின் மற்றும் பவித்ரா ஆகியோர் எலிமினேஷனில் உள்ளனர். இதில் இந்த வாரம் வெளியாகப்போவது பவித்ரா என இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ சீசன் 2 நிகழ்ச்சி இன்னும் சில வாரங்கள் மட்டுமே இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் என்பதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். இந்நிலையில் குக் வித் கோமாளி ரசிகர்களை மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இந்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷன் சுற்று நடைபெறவுள்ளது. இந்த வார எலிமினேஷனில் அஷ்வின் மற்றும் பவித்ரா ஆகியோர் உள்ளனர். இந்த செய்தி ரசிகர்களை மேலும் அதிருப்திக்குள்ளாக்கியது. இந்த இருவரில் யாரேனும் ஒருவர் வெளியேறினாலும் ரசிகர்களுக்கு வருத்தம் தான்.

விஜய் சேதுபதி படத்தின் இயக்குனருக்கு நடந்த ஆபத்து – மருத்துவமனையில் கவலைக்கிடம்!!

முன்னதாக பவித்ரா சொந்த காரணங்களால் இரண்டு வாரமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அதற்கே பவித்ராவை காணவில்லை என ரசிகர்கள் வலைதளங்களில் கேள்வி கேட்டு வந்தார்கள். அஷ்வினை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் சரியான டப்ஃ கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் எலிமினேஷன் சுற்றுக்கு வந்துள்ள இவர் வெளியேறுவதற்கு வாய்ப்பில்லை என ரசிகர்கள் தரப்பு கருத்து கூறுகிறது. அதனால் இந்த வாரம் எலிமினேஷனில் பவித்ரா வெளியேறலாம் அல்லது என்ற கருத்து இணையத்தில் கசிந்து வருகிறது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here