விஜய் சேதுபதி படத்தின் இயக்குனருக்கு நடந்த ஆபத்து – மருத்துவமனையில் கவலைக்கிடம்!!

0

பிரபல இயக்குனர் ஜனநாதனுக்கு நேற்று திடிரென்று உடல் நல குறைவு ஏற்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

ஜனநாதன்:

தமிழ் சினிமாவில் கடந்த 2003ம் ஆண்டு இயற்கை என்னும் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் ஜனநாதன். அந்த படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதினை பெற்றது. ஜனநாதன் இந்த படத்தை தொடர்ந்து ஈ, பேராண்மை போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். இவரது திரைப்படம் அனைத்தும் தனி கதைக்களத்தை கொண்டிருக்கும். இவர் தற்போது விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்கும் லாபம் படத்தை இயக்கி வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

லாபம் படத்தின் படத்தொகுப்பு வேலைகளை முடித்து நேற்று தனது வீட்டிற்கு சென்ற ஜனநாதன் இன்று படத்தொகுப்பு பணிக்கு திரும்பவில்லை. இந்நிலையில் இவரது வீட்டிற்கு இவரை காணப்பதற்கு அவருடைய உதவியாளர் சென்றுள்ளார். அப்போது ஜனநாதன் அங்கு சுயநினைவின்றி இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உதவியாளர் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.

பல திருப்பங்களுடன் ‘யாரடி நீ மோகினி’ சீரியல் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

இவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது இவரது உடல்நலம் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. தற்போது இதுகுறித்து பேசிய இயக்குனர் அமீர் கூறியதாவது, ஜனநாதனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்றுவருகிறது. அவரது உடல் நலம் குறித்து உறுதிசெய்யப்படாத தகவலை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here