விஜய் 65யின் தெறிக்கவிட்ட அப்டேட் – கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்!!

0

இளைய தளபதி விஜய் தற்போது நெல்சன் தயாரிப்பில் நடித்துகொண்டிருக்கும் படத்திற்கான அப்டேட் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. விஜய் எந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது பற்றிய தகவல் வைரலாகி வருகிறது.

விஜய் 65

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். சில வருடங்களாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இதனாலேயே மக்கள் மத்தியில் இவருக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகமாகி வருகிறது. மெர்சல், தெறி என கோடி கணக்கில் இவரது படங்கள் அனைத்தும் வசூலை எட்டியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து 3 படங்கள் அட்லீயுடன் இணைந்து நடித்திருந்தார் விஜய். அடுத்த படத்திற்கும் அட்லீ வந்து நிற்க மற்ற இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று மறுத்து விட்டாராம். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்த விஜய் இந்த படம் செம ஹிட் கொடுத்தது. 50 நாட்களுக்கு மேலாக சக்கைபோடு போட்டது.

குக் வித் கோமாளியில் அஸ்வின் எலிமினேஷனா?? கலக்கத்தில் ரசிகர்கள்!!

தற்போது விஜய் தனது 65 வது படத்தில் நடித்து வருகிறார். இதனை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனை நெல்சன் இயக்குகிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக போவதாகவும் தகவல் வெளியானது. நாளுக்கு நாள் விஜய் 65 படத்தின் அப்டேட் வெளியாகி ரசிகர்களின் ஆவலை தூண்டிவிட்டு வருகிறது.

தற்போது இந்த படத்தில் விஜயின் கதாபாத்திரம் பற்றி செய்திகள் வெளிவந்துள்ளது. அதாவது ஸ்பை ஏஜென்ட்டாக நடிக்க இருக்கிறாராம். இந்த படம் துப்பாக்கி படத்தை போல இருப்பதாகவும் பலர் கூறி வருகின்றனர். அதன் பின் லண்டனில் படப்பிடிப்புகள் தொடங்க இருக்கிறது என்றும் கூறுகின்றனர். இந்த செய்தியை கேட்ட தளபதி ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here