‘குக் வித் கோமாளி’ புகழ் அம்மாவுடன் எடுத்த செல்பி – ட்விட்டரில் வைரல்!!

0

”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் கோமாளியான சின்னத்திரை காமெடி நடிகர் புகழ் தனது அம்மாவுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை முதல் முறையாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அம்மாவுடன் விஜய் டிவி புகழ்

பொதுவாக மற்றவர்களை சிரிக்க வைத்து பார்ப்பது உலகத்திலேயே மிகவும் கடினமான விஷயம் தான். அந்த வேலையே மிகவும் இலகுவாக செய்துகொண்டிருக்கும் நிகழ்ச்சி ”குக் வித் கோமாளி”. விஜய் டிவியின் டாப் ரேட்டிங்கில் எப்போதும் முதல் இடத்தை பிடித்திருக்கும் நிகழ்ச்சி என்றால் அது ”குக் வித் கோமாளி”. இந்த நிகழ்ச்சியின் நட்சத்திர கோமாளியான புகழ் தனது நடிப்பாலும், முகத்தின் பாவனைகளினாலும் அனைத்து தர ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்துள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை – முதல்வர் மசோதா தாக்கல்!!

ஆரம்ப காலகட்டங்களில் விஜய் டிவியில் ”அது இது எது” நிகழ்ச்சியில் மிகவும் சிறிய வேடங்களில் நடித்து வந்தார் புகழ். இவரது புகழை உலகத்தின் வெளிச்சத்துக்கு காட்டியது ”குக் வித் கோமாளி” சீசன் 1 நிகழ்ச்சி. கடந்த ஆண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த சமையல் நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட புகழுக்கு மக்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்புகள் கிடைத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது நடந்து வரும் சீசன் 2 விலும் அசத்தி வரும் புகழ், ஒருவாரம் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றால் வருத்தமடையும் அளவிற்கு இவரது இவருக்கு ரசிகர்கள் ஏராளம். அண்மையில் புகழ் தனது தாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை முதன் முதலாக தனதுசமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here