ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐபோன் 13 – சிறப்பம்சங்களால் அதிர்ச்சியான பயனர்கள்!!

0

பிரபல ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐபோன் 13 போனின் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சிறப்பம்சங்களால் பயனாளர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

ஐபோன்:

பிரபல ஆப்பிள் நிறுவனம் தான் ஐபோன் மாடல்களை தயாரித்து வருகிறது. ஐபோன் என்றாலே பயனாளர்களிடம் தனி வரவேற்பை பெற்றிருக்கும். மேலும் ஆப்பிள் நிறுவனம் பயனாளர்களின் தேவைக்கேற்ப பல வசதிகளை செய்து வருகிறது. மேலும் அதற்கேற்றபடி ஐபோனின் விலையும் இருக்கும். தற்போது வரை ஐபோன் அதிக விலையில் தான் விற்பனை ஆகி வருகிறது. இருந்தும் இந்த போன் பயனாளர்களிடம் தனி வரவேற்பை பெற்றுள்ளது என்றே சொல்லலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

லேட்டஸ்ட்டாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 என்னும் மாடலை வெளியிட்டது. தற்போது இந்த நிறுவனம் ஐபோன் 13 தயாரிக்கும் பணிகளில் இறங்கியுள்ளது. இந்த போன் குறித்து சில தகவல்கள் வெளியாக துவங்கியுள்ளது. ஐபோன் மாடல்களில் அதிக ஸ்டோரேஜ் பெற்றிருக்கும் போன் என்றால் அது ஐபோன் எக்ஸ் எஸ் ஸ்மார்ட்போன் தான். அந்த போன் மொத்தமாக 512 ஜிபி ஸ்டோரேஜ் தன்மையை உடையது. அதன் பிறகு வெளியான ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12 போன்களில் ஸ்டோரேஜை அதிகப்படுத்தவில்லை.

டெல்லி விவசாயிகள் போராட்டம் – பிரபலங்களின் ட்விட்டுகளுக்கு டாப்ஸி பதிலடி!!

ஐபோன் 13:

ஆனால் தற்போது வரவிற்கும் ஐபோன் 13ல் அதிகப்படியான ஸ்டோரேஜ் திறன் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போனில் 1 டிபி ஸ்டோரேஜ் அதாவது 1000ஜிபி ஸ்டோரேஜ் வசதி பெற்றுள்ளதாம். மேலும் இந்த வசதி ஐபோன் 13 வரிசையில் வரும் ப்ரோ மாடலில் மட்டும் தான் உள்ளதாம். மற்ற மாடல்களில் வெறும் 128கிபி ஸ்டோரேஜ் வசதி தான் உள்ளதாம். ஐபோன் 13ல் திரையிலையே கைரேகை வைக்கும் வசதி, மற்றும் வைபை 6இ இணைப்பை ஏற்கும் வசதியையும் பெற்றுள்ளதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here