4 வது நாளாக வீழ்ச்சியில் தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!!

0

பிப்ரவரி மாதம் துவக்கம் முதல் தங்கத்தின் விலை வீழ்ச்சியை கண்டுவருகிறது. கடந்த மாதம் அதிவேகமாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இந்த வாரம் இன்று நான்காவது நாளாக சரிந்துள்ளது.

தங்கத்தின் விலை

கடந்த வாரம் துவக்கம் முதல் தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. தங்கத்தின் ஏற்ற இறக்க விலையினால் வாடிக்கையாளர்களால் பெரும் குழப்பத்திற்கு உள்ளானார்கள். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக தங்கத்தின் விலை இன்று நான்காவது நாளாக சரிவை கண்டுள்ளது. ஞாயிறு விடுமுறை என்பதால் கடந்த வாரம் சனிக்கிழமை விலையின்படி ஞாயிற்றுகிழமை தங்கம் விற்பனையானது. தெடர்ந்து மீண்டுமாக திங்கட்கிழமை ஆரம்பித்த தங்க வியாபாரம் யாரும் எதிர்பாராதவகையில் சவரனுக்கு ரூ 240 குறைந்தது. தொடர்ந்து செவ்வாய்கிழமை சவரனுக்கு 480 ஆகவும், புதன்கிழமையன்று சவரனுக்கு 288 ஆக சரிந்தது.

ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐபோன் 13 – சிறப்பம்சங்களால் அதிர்ச்சியான பயனர்கள்!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த வாரம் துவக்கம் முதல் தொடர்ந்து நான்காவது நாளாக குறைந்துள்ள தங்கத்தின் விலை தற்போது மீண்டுமாக சரிவை எட்டியிருக்கிறது. சென்னையில் தற்போதுள்ள நிலவரப்படி 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ 32 சரிந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ 4,497 க்கு விற்கப்பட்டது. அதே போல ஒரு சவரன் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ 256 குறைந்து ஒரு சவரன் ரூ 35,970 க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் வீழ்ச்சியை கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ 72.20 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தங்கம் வாங்குபர்கள் சற்று ஆறுதலுடன் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here