#INDvsENG முதல் சென்னை டெஸ்ட் – உத்தேச 11 அணி வீரர்கள் விபரம்!!

0

தற்போது நாளை சென்னை மைதானத்தில் வைத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது. இதில் இந்தியா அணியில் 11 வீரர்கள் குறித்த உத்தேச அணி தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி நாளை முதல் டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது. இரு அணிகளும் 4 டெஸ்ட் போட்டி, 5 டி 20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளை விளையாட உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முதலாவதாக டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியும் சென்னை மைதானத்திலும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டியும் அஹமதாபாத் மைதானத்திலும் நடைபெற உள்ளது.

இந்தியா அணி:

மேலும் டி 20 போட்டிகள் அனைத்தும் அஹமதாபாத் மைதானத்தில் வைத்து நடக்கும். மேலும் ஒரு நாள் தொடர் புனே மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது. தற்போது நாளை துவங்க உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அணியில் இடம் பெரும் வீரர்கள் குறித்து ஓர் தகவல் வெளியாகியுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் மற்றும் சுப்மங் கில் களமிறக்கப்படலாம். 3 வது பேட்ஸ்மேனாக புஜாராவும், 4 மற்றும் 5 வது இடத்தில் கோஹ்லி மற்றும் ரஹானே களமிறங்க வாய்ப்புள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐபோன் 13 – சிறப்பம்சங்களால் அதிர்ச்சியான பயனர்கள்!!

மேலும் 6 வது இடத்தில் ரிஷாப் பாண்டும் மற்றும் 7 வது இடத்தில் சுந்தர் களமிறங்க வாய்ப்புள்ளது.சென்னை மைதானம் சுழற்பந்துக்கு சாதகமாக இருப்பதால் ஆல் ரௌண்டராக ஹர்டிக் பாண்டியாவிற்கு பதில் சுந்தர் தேர்வாக தான் அதிக வாய்ப்புள்ளது. மேலும் சுழற்பந்துவீச்சாளராக அஸ்வின் மற்றும் குல்தீப் இடம் பெறலாம். வேக பந்துவீச்சாளராக பும்ராஹ் மற்றும் இஷாந்த் சர்மா இடம் பெற வாய்ப்புள்ளது. ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப இந்தியா அணி 3 சுழற் பந்துவீச்சாளர்கள் மற்றும் 2 வேக பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

முதல் டெஸ்டின் இந்திய 11 பேர் கொண்ட உத்தேச அணி:

ரோஹித் சர்மா, சுப்மங் கில், புஜாரா, விராட் கோஹ்லி(C), ரஹானே, ரிஷாப் பண்ட்(WC), சுந்தர், அஸ்வின், குல்தீப், பும்ராஹ் மற்றும் இஷாந்த் சர்மா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here