தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை – முதல்வர் மசோதா தாக்கல்!!

0

ஆன்லைன் சூதாட்ட கேமினை தமிழகத்தில் முழுவதுமாக தடை செய்வது குறித்து இன்று நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்:

தமிழகத்தில் தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் வரும் 5ம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த தொடர் தொடக்கத்தில் இருந்தே எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஆளுநர் உரையையும் புறக்கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வேளாண் சட்டங்களை எதிர்த்து எதிர் கட்சிகள் இந்த அமளியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதுவே இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆன்லைன் சூதாட்ட கேமினை குறித்து ஓர் மசோதாவை தாக்கல் செய்யவுள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட கேமிற்கு தடை விதித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி தமிழக அரசு தடை சட்டத்தை கொண்டுவந்தது. தற்போது இன்றைய கூட்டத்தில் அதற்கு தடை விதிக்கும் மசோதாவை முதல்வர் தாக்கல் செய்யவுள்ளார்.

நீல நிற சேலையில் மஜாவாக போஸ் கொடுக்கும் யாஷிகா ஆனந்த் – திக்குமுக்காடிய இணையதளம்!!!

மேலும் உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்களின் பணி காலம் நீடிப்பதற்கான மசோதாவை அமைச்சர் வேலுமணி இன்று தாக்கல் செய்யவுள்ளார். அவர்களின் பணி காலத்தை ஜூன் மாதம் வரை நீடிப்பதற்கான மசோதாவை தாக்கல் செய்யவுள்ளார். இதனால் தேர்தல் நடக்காத மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளில் தனி அலுவலர்கள் ஆட்சி காலம் நீடிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here