சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டு தொகை – தமிழகத்திற்கு 339.78 கோடி ஒதுக்கீடு!!

0

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தியத்தின் மூலம் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்பட்ட வருவாய் பற்றாக்குறை காரணமாக மத்திய அரசு தமிழகத்திற்கு 339.78 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இழப்பீட்டு தொகை

கடந்த 2017 ம் ஆண்டு ஜூலை மாதம் 1 ம் தேதி நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவைக்கான வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த வரியின் மூலம் மாநில அரசுகளுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக மாநில அரசுகள் 1.10 லட்சம் கோடி வரை சிறப்பு சாளரத்தின் கீழ் கடனாக பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள் மூடலா?? – மத்திய அரசு விளக்கம்!!

இந்த இழப்பீடு தொகையின் 14 வது தவணையாக கடந்த புதன் கிழமை 6000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த இழப்பீடு தொகை இந்தியாவின் 23 மாநிலங்களுக்கும் 3 யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு ஒதுக்கீடு

இதற்கான அனுமதியை மத்திய நிதித்துறை வழங்கியுள்ளது. மத்திய அரசு வழங்கிய இந்த இழப்பீடு தொகையிலிருந்து 23 மாநிலங்களுக்கு 5,516.60 கோடி தொகையும், 3 யூனியன் பிரதேசத்திற்கு 483.40 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு 339.78 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாகத்தால் ஏற்பட்ட வருவாய் பற்றாக்குறைக்கு இதுவரை மாநிலங்களுக்கு மொத்தம் 76,616.16 கோடியும், சட்ட பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசங்களுக்கு 7,383.84 கோடி என மொத்தம் 84,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு சாளர அடிப்படையில் கூடுதலாக கடன் திரட்ட தமிழகத்திற்கு இதுவரை 5,033.57 கோடிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here