பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள் மூடலா?? – மத்திய அரசு விளக்கம்!!

0

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதனால் இதை மூடப்போகிறார்கள் என்னும் தகவல் வெளிவந்த வண்ணமாக இருந்து வருகிறது. தற்போது இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனம்:

அரசுக்கு கீழ் செயல்பட்டு வரும் தொலை தொடர்பு நிறுவனங்கள் தான் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள். இந்த இரு நிறுவனங்களும் கடந்த சில ஆண்டு காலமாகவே வருமானத்தில் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. மேலும் இதை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மாறி வருகின்றனர். இதனால் இந்த இரு நிறுவனங்களும் பெரும் அளவு நஷ்டத்தை சந்தித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் மத்திய அரசு இந்த நிறுவனங்களை மூடப்போவதாக தகவல் வெளிவந்த வண்ணமாக இருந்து வருகிறது. மேலும் இது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது மத்திய தொலை தொடர்புத்துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே கடந்த புதன்கிழமை அன்று இதற்கு எழுத்து பூர்வமாக பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது கடந்த 2018-19ம் ஆண்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சுமார் ரூ.14,904 கோடி நஷ்டமாகியுள்ளது. மேலும் 2019-20 ஆண்டில் ரூ.15,500 கோடி நஷ்டம் அடைந்துள்ளது.

மத்திய அரசு அறிவிப்பு:

இதேபோல் கடந்த 2018-19ம் ஆண்டில் எம்டிஎன்எல் நிறுவனத்திற்கு சுமார் ரூ.3,398 கோடி ரூபாய் நஷ்டமாகியுள்ளது. மேலும் கடந்த 2019-20ம் ஆண்டில் ரூ.3,811 கோடி நஷ்டமாகியுள்ளது. தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 78,569 நபர்களும், எம்டிஎன்எல் நிறுவனத்தில் 14,387 நபர்களும் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர். இதனால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஊதிய செலவில் 50 சதவீதமும், எம்டிஎன்எல் நிறுவனத்தின் ஊதிய செலவில் 75 சதவீதமும் குறைந்துள்ளது.

‘இனி டெலீட் ஆனதை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்’ – இன்ஸ்டாகிராம் அப்டேட்டால் பயனாளர்கள் குஷி!!

தற்போது இந்த இரு நிறுவனத்தின் மூடல் குறித்து மத்திய அரசு ஓர் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி இந்த இரு பொதுத்துறை நிறுவனங்களை மூட திட்டமில்லை என்று தெரிவித்துள்ளது. இதனால் நிறுவனத்தின் பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த நிறுவனங்களின் புத்தாக்கத்துக்காக கடந்த 2019ம் ஆண்டில் ரூ.69,000 கோடி நிதி தொகுப்பை மத்திய அரசு அறிவித்துள்ள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here