‘இனி டெலீட் ஆனதை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்’ – இன்ஸ்டாகிராம் அப்டேட்டால் பயனாளர்கள் குஷி!!

0

சமூகவலைத்தளங்கள் செயலிகளில் மிக முக்கியமாக கருதப்படும் செயலி தான் இன்ஸ்டாகிராம். தற்போது இந்த செயலி அப்டேட் செய்துள்ளது. அந்த அப்டேடில் இனி நாம் நீக்கிய தகவல்களை அடுத்த 30 நாட்களுக்குள் திரும்ப பெறும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இன்ஸ்டாகிராம்:

சமூகவலைத்தளங்களுக்கான செயலிகளில் மிக முக்கிய பங்கை இன்ஸ்டாகிராம் செயலி வகிக்கிறது. இந்த செயலி பயனாளர்கள் விருப்பங்களுக்கேற்ப பல அப்டேட்களை செய்து வருகிறது. மேலும் இந்த செயலியில் மீம் கிரியேட்டர்ஸ் தங்களது முழு திறமையையும் காட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் டிக் டாக் பேன் செய்ததை அடுத்து இந்த செயலி ரீல்ஸ் என்னும் புதிய வசதியை கொண்டு வந்தது. இது டிக் டாக் இல்லாத குறையை பயனாளர்களுக்கு போக்கி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த செயலி பயனாளர்களுக்கு ஓர் பொழுதுபோக்கு தலமாக இருந்து வருகிறது. மேலும் இந்த செயலியை உலக அளவில் பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த செயலி புது அப்டேட் பற்றிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி தற்போது வரும் புதிய அப்டேடில் நாம் ஏதும் பதிவுகளை நீக்கினால் அதனை அடுத்த 30 நாட்களுக்குள் திரும்ப பெரும் வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது.

கொரோனா அச்சம் எதிரொலி – 20 நாட்டு பயணிகளுக்கு சௌதி அரசு தடை!!

அதன்படி நாம் டெலீட் செய்த போஸ்ட், புகைப்படம், ரீலிஸ், கோப்புகள், வீடியோ, ஸ்டோரீஸ் போன்றவற்றை நாம் டெலீட் செய்தாலும் இனி கவலை பட தேவையில்லை. ஏனென்றால் ரிசென்டலி டெலீட் என்னும் வசதி மூலம் இவை அனைத்தையும் நாம் திரும்ப பெறலாம். தற்போது இந்த வசதியினால் பயனாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here