கொரோனா அச்சம் எதிரொலி – 20 நாட்டு பயணிகளுக்கு சௌதி அரசு தடை!!

0

தற்போது கொரோனா அச்சம் காரணமாக சௌதி அரேபியா நாடு புதிய சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி இன்று முதல் சௌதி அரேபியா நாட்டிற்கு 20 நாட்டு பயணிகள் செல்ல தடை விதித்துள்ளது.

சௌதி அரேபியா:

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி அனைவரையும் துன்புறுத்தி வருகிறது. தற்போது உலக நாடுகள் அனைத்தும் அவசர கால பயன்பாட்டிற்காக தங்களது நாட்டு மக்களுக்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை வழங்கி வருகின்றனர். மேலும் தற்போது சில உலக நாடுகளில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. மேலும் சௌதி அரேபியா அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சௌதி நாடு வெளியிட்ட அறிக்கையின் படி இன்று முதல் 20 நாட்டு பயணிகள் சௌதி அரேபியாவிற்கு செல்ல தடை விதித்துள்ளது. இந்த தடை சௌதி குடிமக்கள், தூதரர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் பயணிகளின் தடை காலத்தின் அளவு பற்றிய தகவல் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் சௌதி அரேபியா நாடு அறிவித்துள்ளது.

‘காலம் யாருக்காகவும் காத்திருக்காது’ – மிரட்டலாக வெளியான ”மாநாடு” படத்தின் டீசர்!!

ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, பிரான்ஸ், எகிப்து, லெபனான், பாகிஸ்தான், அர்ஜென்டினா, பிரேசில், இந்தோனேசிய, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், போர்ச்சுகல், ஸ்விசர்லாந்து, சுவீடன் மற்றும் துருக்கி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here