ஹிந்தியில் ரீமேக் ஆகும் ”ஓ மை கடவுளே” திரைப்படம் – படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0

கடந்த ஆண்டு தமிழில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் ”ஓ மை கடவுளே”. பேண்டஸி கலந்த காதல் படமாக தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் ஹிந்தி மொழியில் மறுதயாரிப்பு ஆக உள்ளது என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஓ மை கடவுளே

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ம் தேதி காதலர் தின சிறப்பாக வெளியானது ‘ஓ மை கடவுளே’ திரைப்படம். அறிமுக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், விஜய் சேதுபதி, வாணி போஜன் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர்களின் நடிப்பில் உருவான படம் வசூல் ரீதியாகவும் விமர்சனங்கள் ரீதியாகவும் பெரிய வெற்றி பெற்றது. வித்தியாசமான காதல் கதையுடன் காமெடியும் பேண்டஸியும் சேர்த்து இப்படைப்பை உருவாக்கியிருந்தார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து.

குக் வித் கோமாளியில் வைல்ட் கார்டில் பிரபல சீரியல் நடிகை – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த பட அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ‘ஓ மை கடவுளே’ படத்தை தெலுங்கில் இயக்கப்போவதாக சில தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தை ஹிந்தியில் அவர் மறுதயாரிப்பு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தெலுங்கு ரீமேக்கில் கடவுள் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும், அசோக் செல்வனுக்கு பதிலாக விஷ்வக் சென் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ”ஓ மை கடவுளே” ஹிந்தியில் உருவாகும் திரைப்படத்தை தெலுங்கு படத்தை எடுத்து முடித்த பின்பு அஸ்வத் மாரிமுத்துவே இயக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here