Home Uncategorized அதிமுக, அமமுக இணைப்பு 100% வாய்ப்பில்லை – ஜெயக்குமார் பேட்டி!!

அதிமுக, அமமுக இணைப்பு 100% வாய்ப்பில்லை – ஜெயக்குமார் பேட்டி!!

0
அதிமுக, அமமுக இணைப்பு 100% வாய்ப்பில்லை  – ஜெயக்குமார் பேட்டி!!

தற்போது சிறையில் இருந்து விடுபட்ட சசிகலா வரும் 7ம் தேதி அன்று தமிழகம் வரவுள்ளார். மேலும் அதிமுகவை திரும்ப பெறுவோம் என்று தினகரன் கூறிவருகிறார். இந்நிலையில் தற்போது அதிமுக மற்றும் அமமுக காட்சிகள் இணைய 100 சதவீதம் வாய்ப்பில்லை என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுக:

தமிழகத்தின் மறைந்த முன்னாள் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்பு அதிமுக காட்சியில் பல்வேறு பிளவுகள் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகிறது. மேலும் கடந்த 2017ம் ஆண்டில் சொத்துகுவிப்பு வழக்கிற்காக சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27ம் தேதி அன்று விடுதலை பெற்றார். மேலும் உடல் நல குறைவால் மருத்துமனையில் சிகிச்சை மேற்கொண்டும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது வரும் 7ம் தேதி அன்று சசிகலா தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாக தினகரன் அறிவித்துள்ளார். இதனால் அதிமுக கட்சியில் தற்போது மீண்டும் பிரச்சனைகள் கிளம்ப தொடங்கியுள்ளது. அதிமுக கட்சிக்கு நாங்கள் உரிமை பெற்று சசிகலா தலைமையில் தமிழகத்தில் ஆட்சியமைப்போம் என்று தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் தீயசக்திகளை ஒழிப்பதற்காக தான் அமமுக கட்சி துவங்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜெயக்குமார் பேட்டி:

தற்போது இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, முதலில் இரட்டை இல்லை சின்னத்தையும் அதிமுக கட்சியையும் எதிர்த்து போட்டியிட்ட அமமுக தற்போது அதிமுக கட்சியை உரிமம் கூறுவது அனைவருக்கும் கடுப்பாகும் ஓர் விஷயம். மேலும் சசிகலா வருகையால் எந்த தாக்கமும் நடைபெறாது. அதுமட்டுமல்லாமல் முதல்வர் கூறியது போலவே அதிமுக மற்றும் அமமுக கட்சி இணைப்பில் 100 சதவீதம் வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

தடாலடியாக குறைந்த ஆபரணத்தங்கத்தின் விலை – மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!!

அதிமுக கட்சியில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத தினகரன் மற்றும் சசிகலா எப்படி அதிமுக கட்சியை உரிமம் கூற முடியும். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக கட்சியே அடுத்த 100 ஆண்டுக்கு ஆட்சியில் இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தற்போது 2ம் கட்ட வேலைகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் சென்று வர இடையூறு ஏற்படும். இதன் காரணமாகத்தான் ஜெயலலிதா நினைவிடம் தற்போது மூடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here