‘காலம் யாருக்காகவும் காத்திருக்காது’ – மிரட்டலாக வெளியான ”மாநாடு” படத்தின் டீசர்!!

0

நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் சார்ந்த திரில்லர் வகையில் எடுக்கப்பட்ட ”மாநாடு” திரைப்படத்தின் டீசர் ஐந்து மொழிகளில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழில் இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்.

சிம்புவின் ”மாநாடு”

இன்று நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ”மாநாடு” திரைப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்பு இயக்குனர் வெங்கட் பிரபுவின் ”மாநாடு” படத்தில் நடித்து வந்தார் சிம்பு. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியான கையோடு படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் மிரட்டலாக வெளியாகியுள்ளது ”மாநாடு” டீசர்.

சைடு போஸில் கும்முனு காட்சியளிக்கும் அனிகா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

த்ரில்லர் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் சிம்பு ‘அப்துல் காலிக்’ என்ற முஸ்லீம் நபராக நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் காவல்துறை அதிகாரியாக எஸ்ஜே சூர்யா நடித்துள்ளனர். டீசர் முழுவதும் சிம்பு மட்டுமே நிகழ்காலத்தில் இருப்பது போலவும் மற்ற எல்லா காட்சிகளும் பின்னோக்கி செல்வது போலவும் உள்ளது. வெறும் பின்னணி இசையில் வெளியான டீசரில் ‘காலம் யாருக்காகவும் காத்திருக்காது. ஒருவேளை காத்திருந்தால்’ என்ற ஒற்றை வரி மட்டும் இடம்பிடித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படத்தின் டீசர் தமிழ்மொழியில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் மூலம் வெளியிடப்பட்டது. இதன் மலையாள டீசரை நடிகர் ப்ரித்வி ராஜ், தெலுங்கு டீசரை ரவி தேஜா, கன்னட டீசரை கிச்சா சுதீப், ஹிந்தி டீசரை இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இந்த கதை கோயம்புத்தூர் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது என டீசர் மூலம் தெரிகிறது. சிம்புவின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் ‘மாநாடு’ படத்தின் டீசர் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here