‘டான்’ படத்தில் இணையும் மற்றொரு குக் வித் கோமாளி பிரபலம் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘டான்’ திரைப்படத்தில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் பிரபலம் ஷிவாங்கி இணைந்துள்ளார். தற்போது குக் வித் கோமாளியின் மற்றோரு பிரபலமும் இந்தப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘டான்’ படத்தில் இணைந்த குக் வித் கோமாளி பிரபலம்

இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திக்கேயன் தற்போது நடித்து வருகின்ற திரைப்படம் டான். ஆக்சன் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இந்தப்படத்தில் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துவருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படத்தில் சிவகார்த்திக்கேயனுடன் நடிகர் எஸ்ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, நகைச்சுவை நடிகர் சூரி, முனீஸ்காந்த், பால சரவணன் ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குக் வித் கோமாளி புகழ், ஷிவாங்கி தற்போது இந்த படத்தில் சிவகார்த்திக்கேயனுடன் இணைந்துள்ளார்.

நேற்று நடிகர் சிவகார்த்திக்கேயனின் பிறந்தநாள் விழா ‘டான்’ படத்தின் படப்பிடிப்பில், படக்குழுவினர் மத்தியில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிவகார்த்திக்கேயனுடன் ஷிவாங்கி கலந்து கொண்டார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

மினி கிளினிக்கில் பேய்க்கடிக்கு சிகிச்சை வழங்கப்படும் – திறப்பு விழாவில் அமைச்சர் நகைச்சுவை பேச்சு!!

இந்நிலையில் டான் திரைப்படத்தில் மற்றுமொரு குக் வித் கோமாளி நட்சத்திரமான புகழ் இணையுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புகழ் ஏற்கனவே நடிகர் அஜீத்தின் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த செய்தி புகழின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோசத்தைக் கொடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து நடிகர் சிவகார்த்திக்கேயன் பிறந்தநாள் விழாவுக்கு சென்று அவரை வாழ்த்தியுள்ளார் புகழ். இந்த தகவல் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here