மத்திய பிரதேசத்தில் சதமடித்த பெட்ரோல் விலை – முன்னிலையில் ராஜஸ்தான்!!

0

நாடெங்கிலும் கணிசமாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து வரும் நிலையில் ராஜஸ்தானை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது வாகன ஓட்டிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சதம் அடித்த பெட்ரோல் டீசல் விலை:

சர்வதேச கச்சாப்பொருட்களின் விலை உயர்வால் தற்போது பெட்ரோல் டீசலின் விலை மிகவும் உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஸ்ரீகங்கா நகரில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.100.13க்கு விற்பனையானது. ராஜஸ்தானில் வாட் ரூ.2 குறைக்கப்பட்ட நிலையிலும் இவ்வாறு பெட்ரோலின் விலை சதமடித்திருப்பது அம்மாநில மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மினி கிளினிக்கில் பேய்க்கடிக்கு சிகிச்சை வழங்கப்படும் – திறப்பு விழாவில் அமைச்சர் நகைச்சுவை பேச்சு!!

அங்கு உயர் ரக பெட்ரோல் லிட்டர் ரூ.102.91க்கும் டீசல் லிட்டர் ரூ.95.79க்கும் விற்கப்பட்ட நிலையில் சாதாரண டீசல் லிட்டருக்கு ரூ.93.16க்கும் விற்பனை செய்யப்பட்டது . மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெட்ரோல் லிட்டர் ரூ.96-க்கும், டீசல் லிட்டர் ரூ.86.98-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் மத்திய பிரதேச மாநிலம், அனுப்பூரில் பெட்ரோல் லிட்டர் ரூ.99.90-ஆகவும் டீசல் லிட்டர் ரூ.90.35-ஆகவும் விலை உயர்ந்து காணப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முன்னதாக மத்திய அரசு பெட்ரோலின் மீது லிட்டருக்கு ரூ.32.90-ம், டீசலின் மீது லிட்டருக்கு ரூ.31.80-ம் எரிபொருள் உற்பத்தி வரியாக விதிக்கிறது. எனவே தான் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வரி விதிப்பால் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து படிப்படியாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.19.95-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.17.66-ம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக மத்தியபிரதேசமும் பெட்ரோல் டீசல் விலையில் சதமடித்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here