சென்னையில் வீட்டில் வைத்து மது தயாரித்து விற்பனை செய்த பெண் – அதிரடி கைது!!

0
Closeup of five wineglasses arranged one next to the other, half full with several sorts of wines, red, white and rose wines. Glasses are on the table, there are some papers and pens in background as this was the detail from winetasting. Lit from both sides.

சென்னையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்ததை தொடர்ந்து, வீட்டில் சட்ட விரோதமாக மது தயாரித்த பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மது தயாரித்த பெண் கைது

சென்னை திருவெற்றியூரை சேர்ந்த பெண் மேரி. இவர் திருவெற்றியூர் குப்பம் பகுதியில் ஜே.ஜே நகரில் வசித்து வந்தார். சென்னையில் வீடுகளில் வைத்து முறைகேடாக மது தயாரிக்கப்படுகிறது என திருவெற்றியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து திருவெற்றியூர் சட்டம் ஒழுங்கு போலீசார் அந்த பகுதிகளில் சோதனை நடத்தி, விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் போலீசார் நடத்திய சோதனையில் திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த மேரி என்ற பெண் ஒருவர் தனது வீட்டில் வைத்து சட்டவிரோதமாக மது காய்ச்சியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நீச்சல் உடையில் போஸ் கொடுத்த கண்மணி சீரியல் நடிகை – ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

சோதனையில் கேரட் மற்றும் திராட்சை கலவையுடன் ஈஸ்ட் சேர்த்து அதை குடங்களில் வைத்து பீர் தயாரித்து வந்துள்ளது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்து அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். கைதான மேரியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது, கொரோனா காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்ததால் வீட்டிலேயே வைத்து மது தயாரித்ததாக தெரிவித்துள்ளார். இதுவரை நான்கு முறை சிறைக்கு சென்றுள்ள அவர் திரும்பவும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதால், அவர் மீது வழக்குப் பதிவு செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here