மினி கிளினிக்கில் பேய்க்கடிக்கு சிகிச்சை வழங்கப்படும் – திறப்பு விழாவில் அமைச்சர் நகைச்சுவை பேச்சு!!

0

செங்கல்பட்டு மாவட்டம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள மினி கிளினிக்கை திறந்து வைப்பதற்காக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் திறப்பு விழாவிற்கு பின்பு மிக நகைச்சுவையாக பேசியுள்ளார்.

அம்மா மினி கிளினிக்:

தற்போது தமிழகத்தில் மக்கள் பயன்படும் வகையில் பல திட்டங்கள் துவங்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்று தான் அம்மா மினி கிளினிக். இதனை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் துவங்கி வருகின்றனர். தற்போது செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மதுராந்தகம் அருகே புதிதாக அம்மா மினி கிளிக் கட்டப்பட்டது. இதனை திறந்து வைப்பதற்காக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வருகை தந்தார். மேலும் அவர் தண்டரை, கடலூர், கொடூர் மற்றும் பெரும்பாக்கம் பகுதியிலும் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

திறப்பு விழாவிற்கு பின்பு பெரும்பாக்கத்தில் பேசிய அமைச்சர் கூறியதாவது, ஒரு ஊருக்கு கோவில், பள்ளிக்கூடம் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு மருத்துவமனையும் முக்கியம். இதன் அடிப்படையில் தான் இந்த அம்மா மினி கிளீன் திட்டம் துவங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை மக்கள் மிகவும் பயனடைவார்கள். மேலும் இந்த மினி கிளினிக்கில் பாம்பு கடி, நாய் கடி, பேய் கடி என அனைத்து கடிக்கும் சிகிச்சை அளிக்கப்படும் என்று சிரிப்பு வரும் முறையில் பேசினார். இதனை கேட்டு அங்குள்ள மக்கள் அனைவரும் சிரித்தனர்.

இணையத்தில் ட்ரெண்டாகும் சித்ராவின் ‘கால்ஸ்’ புகைப்படங்கள் – வைரலாக்கும் ரசிகர்கள்!!

பின்பு ஒரு பிலோவில் சொல்லிவிட்டதாக கூறி தனது பேச்சை துவங்கினார் அமைச்சர். அப்போது அவர் கூறியதாவது, இந்த மினி கிளினில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான மருந்து பொருட்கள் இருக்கும். மேலும் இங்கு 1 மருத்துவர், துணை மருத்துவர், செவிலியர் மற்றும் உதவியாளர் என 4 பேர் வேலை செய்வார்கள் என்றும் ஆவர் தெரிவித்தார். மேலும் இந்த மருத்துவமனையில் தொற்று நோய் மற்றும் தொற்றா நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here