இணையத்தில் ட்ரெண்டாகும் சித்ராவின் ‘கால்ஸ்’ புகைப்படங்கள் – வைரலாக்கும் ரசிகர்கள்!!

0

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா நடித்துள்ள ‘கால்ஸ்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை, சித்ராவின் ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

நடிகை சித்ரா

சின்னத்திரை நடிகையான சித்ரா சினிமா வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார். மக்கள் தொலைக்காட்சி, வேந்தர் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜீ தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சி என அனைத்து தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற தொடரில் நடிகருக்கு தோழியாக நடித்துள்ளார் சித்ரா. பின்னர் ‘வேலுநாச்சியார்’ என்ற தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்தார் இவர். தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாக்கிக் கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற தொடரில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்து வந்தார் சித்ரா.

இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் தான் சித்ராவுக்கு அதிகமான ரசிகர்களை சம்பாதித்து கொடுத்தது. இந்த தொடரில் இவர் நடித்துள்ள முல்லை கதாப்பாத்திரத்துக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். மிக தைரியமான பெண்ணாக வலம் வந்த இவர் தனது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வினால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனியார் விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

2 தலித் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை – உத்திரபிரதேசத்தில் நடந்த கொடூரம்!!

சித்ரா மரணத்துக்கு முன்பாக ‘கால்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி அதிகமான பார்வையாளர்களை சம்பாதித்தது குறிப்பிடத்தக்கது. கால் சென்டர் ஊழியராக சித்ரா நடித்துள்ள இந்த படத்திற்கு u/a சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப்படம் இந்த மாதம் 26ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகை சித்ரா படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here