தமிழகத்தில் தொடங்கிய தர்பூசணி சீசன் – சூடுபிடிக்கும் விற்பனை!!

0

தமிழகத்தில் இனி வரும் மாதங்களில் வெயில் கொளுத்தி எடுக்கும். அதனை தணிக்கும் வகையில் தற்போது தர்பூசணி சீசன் தொடங்கியுள்ளது. தற்போது அதன் விலை பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது.

தர்பூசணி:

தமிழக்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயில் கொளுத்தி எடுக்கும். இதனால் மக்கள் மிகவும் திணறி வருவார்கள். அதிலும் குறிப்பாக சென்னையில் காற்று வீசினால் கூட அது அனல் காற்றாக தான் வீசும். அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனை தணிப்பதற்காக மக்கள் பல பழங்களை உண்டு வருவார்கள். அதில் ஒன்று தான் தர்பூசணி பழம். இந்த பழத்தை மக்கள் அனைவரும் விரும்புவார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்த பழம் சூட்டை அருமையாக தணிக்கும். இந்த பழத்தில் தான் தண்ணீர் சத்து அதிகமாக உள்ளது. வெயில் நேரத்தில் மக்கள் அனைவரும் தர்பூசணி பழத்தை உண்டு வருவார்கள். இது மக்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும். தற்போது தமிழகத்தில் தர்பூசணி பழத்தின் சீசன் துவங்கியுள்ளது. இதனால் மக்கள் குஷி அடைந்துள்ளனர்.

ரசிகர்களுடன் செல்பி எடுத்த நடிகர் அஜீத் – வைரலாகும் புகைப்படம்!!

திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் தர்பூசணி பயிரிடப்பட்டது. தற்போது முதற்கட்டமாக இந்த பகுதிகளில் இருந்து தர்பூசணி பழத்தை சேலம் சத்திரம் ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்காக லாரி மூலம் அனுப்பப்பட்டு உள்ளது.மேலும் இந்த சீசனில் தர்பூசணி ஒரு கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here