ரசிகர்களுடன் செல்பி எடுத்த நடிகர் அஜீத் – வைரலாகும் புகைப்படம்!!

0

‘வலிமை’ படத்தில் நடித்து கொண்டிருக்கும் நடிகர் அஜீத் தற்போது தனது ரசிகர்களுடன் புகைப்படங்களை எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகர்களுடன் நடிகர் அஜீத்

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜீத் தற்போது ‘வலிமை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜீத் மற்றும் இயக்குநர் எச்.வினோத் கூட்டணி மீண்டுமாக ‘வலிமை’ படத்தில் இணைந்தது. இந்த இரண்டு படங்களுக்கும் தயாரிப்பாளர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 

ராஜஸ்தான், ஹைதராபாத் ஆகிய முக்கிய நகரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. சண்டை காட்சிகளுக்காக தென் ஆப்பிரிக்கா சென்ற படக்குழு தற்போது இந்தியா திரும்பியுள்ளது.

வரும் மே மாதம் 1ம் தேதி அஜீத்தின் பிறந்தநாளை ஒட்டி இத்திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் நடிகர் அஜீத்தின் தீவிர ரசிகர்கள் சமூகவலைதளங்களிலும் கிரிக்கெட் மைதானத்திலும் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு வந்தனர்.

தமிழக அரசின் “திருக்கோவில் டிவி” தொடங்கும் வழக்கு – உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!!

இந்த செயலால் வருத்தமடைந்த நடிகர் அஜீத், தனது ரசிகர்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ளும் படி வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து நடிகர் அஜீத் தற்போது தனது ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படங்களை எடுத்துள்ளார்.

கருப்பு நிற டிசர்ட் அணிந்து, கண்ணாடி போட்டுகொண்டு, தொப்பியுடன் தோன்றியுள்ளார் அஜீத். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. வலிமை அப்டேட் கேட்டு வந்த தல ரசிகர்களுக்கு அஜீத்தின் இந்த புகைப்படங்கள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here