தமிழக அரசின் “திருக்கோவில் டிவி” தொடங்கும் வழக்கு – உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!!

0

தமிழக அரசின் சார்பில் தொடங்கப்பட்ட உள்ள “திருக்கோயில்” எனும் டிவி சேனலுக்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யபட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முன்னதாக தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களை ஒளிபரப்ப தமிழக அரசு இந்த டிவி சேனலை ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

டிவி சேனல்:

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் நடைபெறும் விழாக்களை ஒளிபரப்புவதற்காக சுமார் 8.77 கோடி ரூபாய் செலவில் “திருக்கோயில்” என்ற டிவி சேனலை தொடங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதற்கான நிதி இந்து அறநிலையத்துறையின் பொது நல நிதியிலிருந்து பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து இண்டிக் கலெக்ட்டிவ் அறக்கட்டளை சார்பில் நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று போடப்பட்டது. இதில், அரசின் இந்த ஆணையை ரத்து செய்யவும், இந்து சமய அறநிலையத்தின் பொது நல நிதியை டிவி சேனல் தொடங்க பயன்படுத்துவத்தை தடை செய்ய வேண்டியும் தேவையான நடவடிக்கை எடுக்க கோரப்பட்டிருந்தது.

குக் வித் கோமாளி செட்டில் அஸ்வினுக்கு ஷிவாங்கி கொடுத்த சர்ப்ரைஸ் – வைரலாகும் வீடியோ!!

இவ்வழக்கு கடந்த டிசம்பரில் நீதிபதிகள் அனிதா சுமந்த மற்றும் மஹாதேவன் ஆகியோர் அடங்கிய குழுவால் விசாரிக்கப்பட்டது. அப்போது மனுதாரரின் வழக்கறிஞர் ஆஜராகி, அறநிலையத்துறை நிதியிலிருந்து கோவில் சீரமைக்கு மட்டுமே நிதியினை பெற முடியும் எனவும், எந்த வித விதிகளையும் பின்பற்றாமல் அரசு டிவி சேனல் தொடங்க முடிவு செய்துள்ளதாகவும், மேலும் பொதுநல நிதியை பயன்படுத்த ஆட்சேபங்கள் கோர வேண்டுமென்ற விதியும் பின்பற்றபடவில்லை” எனவும் வாதிட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், “டிவி சேனல் ஆரம்பிப்பது என்பது அரசின் கொள்கை முடிவாகும். இதில் எந்த விதிகளும் மீறப்படவில்லை, மேலும் கோவில்களுக்கு நிதி வழங்குவதாக இருந்தால் மட்டுமே ஆட்சேபங்கள் கேட்கபடவேண்டும். டிவி சேனல் துவங்குவதற்கு ஆட்சேபம் கேட்க தேவையில்லை எனவும் வாதிட்டார். மேலும் அவர் “இது பற்றிய வழக்கினை ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்துவிட்டது என்பதையும் தனது வாதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் – செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி!!

இவ்வழக்கினை விசாரித்த நீதிபதிகள் அப்போது தேதி எதுவும் குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். தற்போது மீண்டும் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், திருக்கோவில் டிவி தொடங்க இந்து அறநிலையத்துறையின் நிதியை பயன்படுத்தும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here