ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் – செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி!!

0

தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சியாக தோல்வி அடைந்தார்.

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்:

தற்போது தான் கொரோனா அச்சத்தில் இருந்து நீங்கி அனைத்து தரப்பு போட்டிகளும் நடைபெற்று வருகிறது. மேலும் சில போட்டிகளை நேரலையில் காண்பதற்கு ரசிகர்களையும் மைதானத்தில் கொஞ்சம் அனுமதித்து வருகின்றனர். தற்போது ஆஸ்திரேலியாவில் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான புகழ்பெற்ற ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் நேற்றைய போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் நடந்தது. இந்த போட்டியில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் ஜப்பானின் நவோமி ஒசாகா மோதினர். இந்த போட்டி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்தி வந்தார் ஒசாகா.

சட்டமன்ற தேர்தல் பணியில் மேலும் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் – தமிழக அரசு நியமனம்!!

போட்டியின் முடிவில் ஒசாகா 6-3 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் செரீனாவை தோற்கடித்து அசத்தினார். தற்போது அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமாக உள்ளது. இந்த வெற்றியின் மூலம் தற்போது ஒசாகா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.மற்றொரு அரை இறுதி போட்டியில் கரோலினா முச்சாவோ மற்றும் ஜெனிபர் ஆகியோர் விளையாடி வருகிறார்கள். இதில் வெற்றி பெறுபவர் ஒசாகாவுடன் இறுதி போட்டியில் விளையாடுவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here