சட்டமன்ற தேர்தல் பணியில் மேலும் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் – தமிழக அரசு நியமனம்!!

0

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பணிகளை மேற்கொள்ளவதற்காக இரண்டு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரிகளான இவர்கள் தேர்தல் பணிகளில் தலைமை தேர்தல் அதிகாரிக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய அதிகாரிகள்:

தமிழகத்தில் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் பணிகளை கவனிக்க தமிழக அரசு கூடுதலாக இரண்டு அதிகாரிகளை நியமித்துள்ளது. இணை தலைமை தேர்தல் அதிகாரியாக ஆனந்த் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு வேளாண் துறை இணைச்செயலாளராக பதவி வகித்தார். மேலும் மற்றொரு இணை தேர்தல் தலைமை அதிகாரியாக அஜய் யாதவ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக சுகாதாரத்துறை இணை செயலாளராக பதவி வகித்து வந்தார்.

new rules and regulations issued by tn government

முடிவுக்கு வருமா பாரதி கண்ணம்மா சீரியல்?? இயக்குனர் பிரவீன் பென்னட் பேட்டி!!

தேர்தல் பணிகளை கவனிக்கவும், தலைமை தேர்தல் அதிகாரிக்கு உதவி செய்யவும், பலவிதமான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மற்றும் முறைகேடுகளை நடக்காதபடி பார்த்து கொள்ளும் பணிகளுக்காக இவர்கள் இருவரும் தமிழக அரசால் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here