14 வது ஐபிஎல் மினி ஏலம் – யாரை முதலில் ஏலத்தில் விடப்போகிறார்கள் தெரியுமா??

0

தற்போது இன்று சென்னையில் வைத்து ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் முதலாவதாக யாரை விடப்போகிறார்கள் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஐபிஎல்:

இந்த ஆண்டிற்கான 14 வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்கான தேதி பற்றிய தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த ஆண்டு மெகா ஏலம் இல்லாத காரணத்தினால் மினி ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. மேலும் இதற்காக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவை இல்லாத வீரர்களை விடுவித்து வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இந்த ஆண்டிற்கான மினி ஏலம் இன்று மாலை 3 மணி அளவில் தொடங்க உள்ளது. இந்த ஏலம் சென்னையில் வைத்து நடக்கவுள்ளது. இதற்காக அனைத்து அணி குழுவும் சென்னைக்கு வந்தனர். மேலும் இந்த ஏலத்தில் குறிப்பிட்ட நபரை மட்டும் தான் அனுமதிக்க உள்ளார்களாம். அங்கு அனுமதிக்கப்படும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள படும் என்றும் அறிவித்தனர்.

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனாவால் குணமடைந்தவர்களின் விகிதம் – சுகாதாரத்துறை தகவல்!!

தற்போது இன்று நடைபெற உள்ள ஏலத்தில் முதலாவதாக யாரை விடப்போகிறார்கள் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முதலாவதாக ஆஸ்திரேலிய அணி வீரர் ஆரோன் பின்ச்சை ஏலத்தில் விடப்போவதாக கூறுகின்றனர். இவரை தொடர்ந்து, ஸ்மித், மேக்ஸ்வெல், கேதர் ஜாதவ் மற்றும் மலான் ஆகியோர் ஏலத்தில் விடப்படுவார்களாம். இந்த மினி ஏலத்தில் 292 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here