இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனாவால் குணமடைந்தவர்களின் விகிதம் – சுகாதாரத்துறை தகவல்!!

0

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா:

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உலகம் முழுவதும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் பரவி வருகிறது. தற்போது தான் உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவில் இருந்து கொஞ்சம் மீண்டு வருகிறது. மேலும் தற்போது இந்தியாவில் கொரோனாவிக்ரு எதிரான தடுப்பூசியாக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசியை வழங்கி வருகின்றனர். தற்போது கடந்த 24மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 12,881 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,09,50,201 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 101 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,56,014 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 11,987 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,06,56,845 ஆக அதிகரித்துள்ளது.

14 வது ஐபிஎல் தொடர் – மீண்டும் ஸ்பான்சர் ஆகும் விவோ!!

தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 1,37,342 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது குணமடைந்தவர்களின் சதவீதம் 97.32 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் விகிதம் 1.25 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவரை கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை நாட்டில் 94,22,228 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here