ஃபுல் மேக்கப்பில் வனிதா வெளியிட்ட செல்பி – கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

0

நடிகை வனிதா விஜயகுமார் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிதாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த படங்களுக்கு தற்போது லைக்குகள் அள்ளுகிறது. அந்த புகைப்படங்களை பார்த்து சிலர் கிண்டலும் செய்து வருகின்றனர்.

வனிதா விஜயகுமார்

முன்னணி நடிகரான விஜயகுமாரின் மூத்த மகள் தான், வனிதா விஜயகுமார். இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகரான விஜயுடனும் இவர் நடித்துள்ளார். அதன் பிறகு தனது குடும்ப வாழ்க்கையினை கவனிக்க சென்று விட்டார். அதிலும் பல பிரச்சனைகளை சந்தித்து வந்தார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிக் பாஸ் 3” நிகழ்ச்சியில் பங்குபெற்றார். இந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களின் வெறுப்பிற்கு ஆளானார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அது மட்டும் அல்லாமல் மக்களின் வெறுப்பினையும் சம்பாதித்தார். இதனை அடுத்து விஜய் டிவி நடத்திய பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானார். பொது முடக்கத்தின் போது தன்னுடன் வேலை பார்த்த பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனை பலரும் கண்டித்தனர்.

பீட்டர் பாலின் முன்னாள் கணவர் கூட இதற்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தார். திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் கூட முழுமையாகாத நிலையில் அவர் அதிகமாக குடிப்பதாக காரணம் காட்டி வனிதா அவரை விட்டு பிரிந்து விட்டார்.

‘ஹேமா பாரதிக்கும் வெண்பாவிற்கும் பிறந்த குழந்தை தான்’ – தவறாக புரிந்துகொள்ளும் கண்ணம்மா!!

இதனால் பலரது கேலி கிண்டலுக்கு ஆளானார். நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறினார். இது இப்படி இருந்தாலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

அதே போல் தற்போது தனது வலைதள பக்கத்தில் நடிகை அம்பிகாவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை பலர் விரும்பினாலும் சிலர் கிண்டல் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here