உலக பணக்காரர் பட்டியல் – பின்னுக்கு தள்ளப்பட்ட எலான் மஸ்க்!!

0
கடைசி நேரத்தில் அந்தர் பல்டி அடித்த எலான் மஸ்க் - ட்விட்டரை வாங்கும் முடிவை ஒத்தி வைப்பு!!
கடைசி நேரத்தில் அந்தர் பல்டி அடித்த எலான் மஸ்க் - ட்விட்டரை வாங்கும் முடிவை ஒத்தி வைப்பு!!

கடந்த மாதம் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸை பின்னுக்கு தள்ளி டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார். தற்போது மீண்டும் எலான் மஸ்க் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

எலான் மஸ்க்:

கடந்த மாதம் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்கின் பங்குகள் பங்கு சந்தையில் அபார வளர்ச்சியை கண்டது. இதன் மூலம் இவரது சொத்து மதிப்பும் அதிரடியாக உயர்ந்தது. இதன் தாக்கத்தால் இவர் உலக பணக்காரர் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்து அசத்தினார். ஜெப் பெஸோஸ் தொடர்ந்து மூன்று ஆண்டு காலமாக முதல் இடத்தில் நீடித்து வந்தார் என்பது குறிபிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் கடந்த மாதம் அவர் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். தற்போது கடந்த 16ம் தேதி நிலவரப்படி எலான் மஸ்கின் பங்குகள் அனைத்தும் அதிரடியாக 2.4 சதவீதம் சரிவை கண்டது. இதனால் இவர் சொத்து மதிப்பும் குறைய தொடங்கியது. மேலும் இவரது சொத்து மதிப்பில் இருந்து சுமார் 33 ஆயிரத்து 580 கோடி அதிரடியாக குறைந்தது. தற்போது இதன் தாக்கத்தால் அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கொல்கத்தா ரயில் நிலையத்தில் அமைச்சர் மீது குண்டு வீச்சு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

கடந்த 16ம் தேதி முதல் முன்னதாக முதல் இடத்தில் நீடித்த அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் மீண்டும் உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். தற்போது எலான் மஸ்கின் சொத்து மதிப்பை விட ஜெப் பெஸோஸின் சொத்து மதிப்பு 6,972 கோடி அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 16ம் தேதி நிலவரப்படி பெஸோஸின் சொத்து மதிப்பு 13.96 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here