ஒரே அறையில் தங்கும் கோபி, ராதிகா – சந்தேகத்தில் மூர்த்தி!! சூடுபிடிக்கும் கதைக்களம்!!

0

விஜய் டிவியில் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் பாக்கியலட்சுமி சீரியலும் மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது ராதிகாவிடம் தனியாக இருக்க வேண்டும் என ஆசைப்படும் கோபி கண்ணனை தனியாக விட்டு செல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனை கோபியுடன் துணைக்கு அனுப்பி வைக்கின்றனர். வேண்டா வெறுப்பாக கண்ணனை அழைத்து செல்கிறார். அங்கு புது இடத்தை பார்த்த கண்ணன் பெட்டில் ஏறி குத்திக்க கோவமடையும் கோபி கண்ணனை திட்டுகிறார்.

வழக்கம் போல வம்பிழுக்கும் கண்ணனை கோபிக்கு சுத்தமாக பிடிக்கவும் இல்லை. எப்பொழுது ராதிகாவின் அறைக்கு செல்லலாம் என காத்துக்கொண்டிருக்கும் கோபி கண்ணனிடம் தனக்கு வேலை இருப்பதாக சொல்லிவிட்டு செல்கிறார். கண்ணன் தனக்கு பயமாக இருப்பதாக சொல்ல கண்டுகொள்ளாமல் செல்கிறார் கோபி.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அங்கு ராதிகாவின் அறைக்கு செல்கிறார். தனக்காக காத்திருக்கும் ராதிகாவிடம் கோபி வழிய, ஒரு முக்கியமான விஷயமாக சென்றதாகவும் அதனால் தான் எவ்வளவு லேட் என்று சொல்ல இத்தனை நாட்கள் வீட்டில் பாக்கியவுடன் எரிந்து விழுந்த கோபியை பார்த்த ரசிகர்களுக்கு இது வேறு முகமாகவே தெரிகிறது.

மேலும் அடுத்தகட்ட அதிர்ச்சி என்னவென்றால் கோபி ராதிகாவின் அறையிலேயே தங்கி விடுகிறார். இரவு நேர சாப்பாட்டையும் இருவரும் ஒன்றாகவே சாப்பிடுகின்றனர். கண்ணன் பயந்து போய் மூர்த்திக்கு கால் செய்ய பாக்கிய கோபிக்கு கால் செய்து சொல்கிறார்.

இணையத்தில் ட்ரெண்டாகும் சித்ராவின் ‘கால்ஸ்’ புகைப்படங்கள் – வைரலாக்கும் ரசிகர்கள்!!

ஆனால் கோபியோ தன்னால் கண்ணனுடன் எல்லாம் தங்க முடியாது என்று சொல்லிவிட்டு வைத்து விடுகிறார். பாக்கிய இங்கு எப்படியோ சொல்லி சமாளிக்க விடிந்ததும் அறைக்கு வரும் கோபி கண்ணனை துரத்துவதிலேயே குறியாக உள்ளார். அடுத்ததாக பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை காட்டுகின்றனர். பாக்கியா சமைத்து கொண்டிருக்க மீனா அவரிடம் குடும்பத்தை பற்றி விசாரிக்கிறார்.

அப்பொழுது இத்தனை நாள் தான் வாழும் வாழ்க்கையை பற்றி சொல்லி அனைவரும் கண்கலங்குகின்றனர்.வெளியில் பாக்கியவை பற்றி இனியாவிடம் மூர்த்தி விசாரிக்க கோபியின் நடவடிக்கையை பற்றி கேட்டதும் அதிர்ச்சியாகின்றனர். மேலும் கோபி மீது மூர்த்திக்கு ஏற்கனவே சந்தேகம்இருக்க எதோ தவறாக படுவது போல தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here