‘இவ்வளவு அழகா காதலை சொன்னா எப்படி வேணாம்னு சொல்றது’ – புகழின் காதலுக்கு ஓகே சொன்ன பவித்ரா!!

1

நேற்று நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரசியமான சம்பவங்கள் அரங்கேறியது. இந்நிலையில் பவித்ரா மற்றும் புகழ் இடையே காதல் மலர்ந்துள்ளதா?? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் நேற்று வெளியான எபிசோடில் ரசிக்கும் படியான பல காட்சிகள் காணப்பட்டது. அதில் புகழ் மற்றும் பவித்ரா இடையே நடந்த காட்சிகள் எல்லாம் ரசிகர்களை சந்தேகத்துக்குள்ளாக்கியது. அதாவது குக் வித் கோமாளியில் நேற்று வைல்ட் கார்டு சுற்று நடைபெற்றது. அதில் எலிமினேட்டான அனைத்து குக்குகளும் மீண்டுமாக கலந்து கொண்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் பவித்ராவும் கலந்து கொண்டார். அப்போது கோமாளிக்கான பேரிங்கின் போது பவித்ரா குரங்கு பொம்மையை செலக்ட் செய்ய அவருக்கு புகழ் கோமாளியாக வந்தார். அதற்கு முன்னதாக கோமாளியை பவித்ரா செலக்ட் செய்யும் போதே, உள்ளே இருந்த புகழ் குரங்கு பொம்மையை எடுங்க, மக்கள் விரும்புகிற பேர் இது தான் என கூறிக்கொண்டே இருந்தார்.

கண்ணம்மாவை தோற்கடிக்க திட்டம் போடும் பாரதி, வெண்பா – நிறைவேறுமா?? சூடுபிடிக்கும் கதைக்களம்!!

அவ்வாறே பவித்ராவுக்கு புகழ் வந்ததும் சந்தோஷத்தில் துள்ளி குதித்து விட்டார் பவித்ரா. இதுவரை எந்த கோமாளிகள் வந்ததும் அவ்வாறு செய்யாத பவித்ரா புகழ் வந்தவுடன் துள்ளி குதித்தது பார்ப்பதற்கு ரசிக்கும்படியாக இருந்தது. அதிலும் குக் வித் கோமாளியின் கடைசி ட்விஸ்ட்டாக பவித்ரா பைனலுக்கு அனுப்பப்பட்டார்.

அப்போது புகழ் பேசும்போது பவித்ராவை பைனலுக்கு அனுப்புவேன் என சொன்னேன் அதே போல அனுப்பி விட்டேன் என கூறி சந்தோஷப்பட்டார். இது தவிர ஒரு விருது விழாவில், புகழிடம் பவித்ராவுக்கு லவ் ப்ரொபோஸ் பண்ண சொல்லி கேட்க, புகழ் ப்ரொபோஸ் செய்யும் போது இவ்வளவு அழகாக ப்ரொபோஸ் பண்ணா எப்படி ஓகே சொல்லாம இருப்பது என பவித்ரா கேட்டுள்ளார்.

இந்த தகவலை வைத்து புகழ் பவித்ராவுக்கு இடையே ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறது என ரசிகர்களிடேயே பேசப்பட்டு வருகிறது. எப்படி இருந்தாலும் எங்களுக்குள் எதுவும் இல்லை, நாங்க நண்பர்கள் தான் என இருவரும் கூறுவார்கள் என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இருந்தாலும் குக் வித் கோமாளியில் அஷ்வின் – ஷிவாங்கிக்கு பிறகு புகழ் – பவித்ரா ஜோடிக்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here