அஸ்வின் இல்லாத கடுப்பில் வேலை பார்க்கும் ஷிவாங்கி – கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியான ‘குக் வித் கோமாளி’ ப்ரோமோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. பிக் பாஸ் நிகழ்ச்சியையே தூக்கிவிடும் அளவிற்கு இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இந்நிகழ்ச்சிக்கான ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளியின் போன வாரம் முழுக்க செம கலாட்டாவாக ஒளிபரப்பானது. நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆவல் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. மேலும் மக்கள் மத்தியில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு மவுசு குறையாமல் தான் உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

புகழ், ஷிவாங்கி அடிக்கும் லூட்டிக்கு அளவே போய்க் கொண்டுள்ளது. புகழ் ஒரு பக்கம் பவித்ரா பின்னால் சுற்ற, ஷிவாங்கி மறுபக்கம் அஸ்வின் பின்னால் சுற்ற நிகழ்ச்சியே கலகலப்பாக போய்க்கொண்டுள்ளது. போன சீசனில் ரம்யா புகழ் ஜோடி களைகட்ட இந்த தடவை ஷிவாங்கி, அஸ்வின் ஜோடி தான் டாப்பாக உள்ளது.

என்ன நடந்தாலும் சிரித்துக் கொண்டே இருக்கும் மணிமேகலை, லொடலொடவென பேசிக்கொண்டிருக்கும் பாலா என இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சூப்பர் காம்போ என்றே சொல்லலாம். தற்போது இந்த வாரத்திற்கான குக் வித் கோமாளி ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வாராவாரம் எப்படி இப்படி கலகலப்புடன் கொண்டு போகிறார்கள் என்று தான் தெரியவில்லை. இந்த வாரம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் எபிசோடாக ஒளிபரப்பாகிறது. அதிலும் ஷிவாங்கியின் கெட்டப்பை பார்த்தாலே வயிறு குலுங்க சிரிப்பு தான் வருகிறது.

அர்ச்சனா இல்லாமல் வெறித்தனமாக விளையாடும் ரியோ, சோம்!!

இந்த தடவை அஸ்வினுடன் இல்லாததால் கடுப்பிலேயே வேலை செய்கிறார். மேலும் இம்யுனிட்டி டாஸ்காக சப்பாத்தியை ஸ்டார் வடிவில் போட வேண்டும். மேலும் தீபா வேறு நிகழ்ச்சிக்கு திரும்ப வந்துள்ளார். ஸ்டார் என்ற பெயரில் சூனியபொம்மை போல சப்பாத்தி சுடுகிறார் மணிமேகலை.

மேலும் கேக், ஸ்வீட் என கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஆக களைகட்டுகிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. அதிலும் தீபா திரும்ப வந்து விட்டதால் ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் ஷிவானி, பாலா, புகழ், மணிமேகலைக்கு ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here