இந்த வருட டாப் 5 நாயகிகள் யார் தெரியுமா?? வெளியான லிஸ்ட்!!

0

ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் சினிமா துறையில் இந்த வருடத்திற்கான டாப் நாயகிகளை தேர்ந்தெடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான டாப் 5 நாயகிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த லிஸ்ட்டை பார்க்க தொடர்ந்து படிங்க.

டாப் 5 லிஸ்ட்

தமிழ் திரையுலகை பொறுத்தவரை மக்களுக்கு ஒரு நடிகர், நடிகைகளை பிடித்து விட்டால் போதும். அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். இவ்வாறு தமிழில் நடிக்க வந்த நடிகைகள் அனைவரும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தையே பிடித்துள்ளனர். 90ஸ் கிட்ஸ் காலத்தில் இருந்த சிம்ரன் முதல் இப்பொழுது கீர்த்தி சுரேஷ் வரை மக்களால் ஆதரிக்கப்பட்டு முன்னணி நட்சத்திரங்களாக இருந்தவர்களே.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று சும்மாவா சொன்னார்கள். கேரளா, மும்பை என அனைத்து நடிகைகளும் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவே ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் தமிழில் கிடைக்கும் வரவேற்பு அளவிற்கு எந்த திரையுலகிலும் கிடைப்பதில்லை. மேலும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்தில் தமிழில் நிறைய படங்கள் எடுக்கப்படுகின்றன. கீர்த்தி சுரேஷ், நஸ்ரியா, நயன்தாரா போன்ற அனைவருமே கேரளாவை சேர்ந்தவர்கள் தானே.

“அண்ணாத்த” பட ஷூட்டிங்கில் 8 பேருக்கு கொரோனா!!

இந்நிலையில் தமிழ் திரைஉலகில் இந்த வருடத்தில் வெளியான படங்களில் நடித்த டாப் 5 நாயகிகளின் பட்டியல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் சினேகாவும் இந்த டாப் 5 இடத்தை பிடித்துள்ளார். அதாவது இந்த வருடம் வெளியான பட்டாஸ் படத்தில் அருமையாக நடித்திருப்பார்.

இந்த படத்தில் நடிக்கும்போது அவர் கர்ப்பமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் முகம் சுளிக்காமல் அந்த படத்தில் அடிமுறை கலையை வெளிப்படுத்தியிருப்பார். அடுத்ததாக சூரரைப்போற்று பட நாயகி அபர்ணா பலமுருகனும் ஒருவர். அந்த படத்தில் வேற லெவெலில் நடித்திருப்பார்.

இதே போல நமக்கு ஒரு மனைவி இல்லையே என்று பலரும் ஏங்கி தான் வருகின்றனர். அடுத்ததாக இந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா. இந்த வருடம் ஓடிடியில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் செம ஹிட் அடித்தது. இந்த லிஸ்டில் அடுத்ததாக உள்ளது ஐஸ்வரியா ராஜேஷ். இந்த வருடத்தில் க/பெ ரணசிங்கம் என்ற படம் வெளியானது.

இதில் விஜய் சேதுபதியுடன் நடித்திருப்பார். எந்த கதை என்றாலும் அதில் ஒன்றி நடிப்பதே ஐஸ்வர்யாவின் திறமை. அடுத்தாக ரித்திகா சிங்கும் இந்த லிஸ்டில் உள்ளார். நிஜ வாழ்க்கையில் பாக்ஸராக இருக்கும் இவர் அதையும் தாண்டி தனக்கு நடிக்க தெரியும் என்று நிரூபித்தவர். இந்த வருடத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் செம ஹிட். இவரின் நடிப்பும் அதில் பேசப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here