8வது முறையாக இணையும் செல்வராகவன் & யுவன் கூட்டணி – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

கொரோனா காலகட்டத்தால் படப்பிடிப்புகள் யாவும் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது ஊரடங்கு தளர்வுகளில் படப்பிடிப்புகள் வழக்கம் போல ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் தனுஷ், செல்வராகவனுடன் இணையும் கூட்டணி உறுதியானது. இதன் அடுத்த அப்டேட்டாக யுவன் ஷங்கர் ராஜா இதில் இசையமைக்கிறார். இதனை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

செல்வராகவன் – யுவன் கூட்டணி

தமிழ் சினிமாவில் கதைக்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதோ அந்த அளவிற்கு இசைக்கும் ரசிகர்கள் முக்கியத்துவம் அளித்து வருவர். அதிலும் சில இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் கூட்டணி என்றால் சொல்லவே வேண்டாம். அந்த வகையில் ஒரு தான் செல்வராகவன் – யுவன் கூட்டணி.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது செல்வராகவன் தனுஷை வைத்து ஒரு படம் இயக்கப்போவது உறுதியாகியுள்ளது. அதனை தெரிவிக்கும் விதத்தில் ‘தனுஷுடன் என்றால் அது எப்பொழுதுமே விசேஷம் தான்’ குறிப்பிட்டிருந்தார். அப்பொழுதே படம் இயக்கவுள்ளது உறுதியானது. தனுஷின் கர்ணன் திரைப்படம் முடிவடைந்த நிலையில் இந்த புதிய படத்தின் முதல் கட்ட வேலை நடக்கவுள்ளது.

தனது படங்களை பற்றிய அப்டேட்டை ட்விட்டரில் பதிவிடுவதன் மூலமே தெரிவிப்பார். அப்படி தான் இந்த முதற்கட்ட வேலையையும் ஆரம்பித்தார். இந்நிலையில் மறுபடியும் 8வது முறையாக யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருட டாப் 5 நாயகிகள் யார் தெரியுமா?? வெளியான லிஸ்ட்!!

ஆனால் இதற்கு முன்பு ஷான் ரால்டன் தான் இதில் இசையமைக்க உள்ளதாக சொல்லப்பட்டது. செல்வராகவன் – யுவன் கூட்டணியில் இதுவரையில் வெளிவந்த படங்கள் அனைத்துமே மாஸ் ஹிட் தான்.  காதல் கொண்டேன், துள்ளுவதோ இளமை, இப்பொழுது வெளியான என்.ஜி.கே என பல படங்கள் செம ஹிட் தான். அதே போல இந்த படத்திற்கு ஏக வரவேற்பு கிடைத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here