நாட்டில் உள்ள 9 கோடி விவசாயிகளுக்கு தலா 2000 ரூபாய் – பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு!!

1

வரும் டிசம்பர் 25 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வாஜ் பாய் பிறந்தநாளை முன்னிட்டு விவசாயிகளின் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள 9 கோடி விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வழங்க உள்ளனர். விவசாயிகளிடம் காணொளி வாயிலாக உரை நிகழ்த்தவும் உள்ளார்.

விவசாயிகளுக்கான திட்டம்:

இந்தியா முழுதாக விவசாயிகளை நம்பி தான் உள்ளது. இதனால் அவர்களை பாதுகாப்பது அரசின் பிரதான கடமையாக கருதப்படுகின்றது. இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு விவசாயிகளுக்காக சம்மான் நிதி திட்டம் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு அவர்கள் வைத்திருக்கும் நில அளவினை பொறுத்து அவர்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டது.

8வது முறையாக இணையும் செல்வராகவன் & யுவன் கூட்டணி!!

3 தவணையாக 2000 ரூபாய் என்று மொத்தமாக 6000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டம் முதன் முதலாக துவங்கபட்ட போது 2 ஹெக்டேர் அளவுக்கு நிலம் வைத்திருந்த விவசாயிகளுக்கு மட்டுமே இந்த திட்டம் வாயிலாக பலன்கள் கிடைக்கப்பெற்றது. அதன் பிறகு பல திருத்தங்கள் இந்த திட்டத்தில் கொண்டு வரப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக நாட்டில் உள்ள 9 கோடி விவசாயிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2000 ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது வரும் 25 ஆம் தேதி முன்னாள் பிரதமர் வாஜ் பாய் பிறந்தநாளை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் உள்ள 9 கோடி விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வழங்க உள்ளார்.

மொத்தமாக, 18,000 கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு செய்யப்பட உள்ளது. அதன் பின், பிரதமர் மோடி விவசாயிகளிடன் காணொளி வாயிலாக உரை நிகழ்த்தவும் உள்ளார். இந்த திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் வரப்பிரசாதமாக கருதப்படுகின்றது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here