ஒரே புகைப்படத்தால் பாலிவுட்டை வளைத்து போட்ட ராஷ்மிகா மந்தனா – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

1

தெலுங்கு திரையுலகில் குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வந்த ராஷ்மிகாவிற்கு அதிர்ஷ்டவசமாக ஹிந்தி திரையுலகில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

ரஷ்மிகா மந்தனா

கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் நடித்த ‘கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். தெலுங்கில் மட்டும்மல்ல தமிழிலும் செம ஹிட் அடித்தது. அந்த படத்திற்கு பிறகு ராஷ்மிகா மந்தனாவிற்கு ஏக வரவேற்பு கிடைத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். கன்னட திரையுலகில் கிடைக்காத புகழ் இவருக்கு தெலுங்கில் நடித்த ஒரு படத்தின் மூலம் கிடைத்தது. எடுத்த எடுப்பிலேயே மகேஷ் பாபு உடன் இணைந்து நடித்தார். இந்த குறுகிய காலத்தில் இவரின் வளர்ச்சி பல நடிகைகளுக்கு பொறாமையை தான் ஏற்படுத்தியது.

மேலும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் வீடீயோவையும் வெளியிட்டு வந்தார். நஸ்ரியாவிற்கு பிறகு எக்ஸ்பிரசன் குயின் என்றால் அது ராஷ்மிகா தான். தமிழிலும் கொஞ்சம் கொஞ்சம் பேசும் ரஷ்மிகா, ஒரு இன்டெர்வியூவில் தமிழில் இவருக்கு பிடித்த நடிகர் என்றால் அது விஜய் தான் என கூறியிருந்தார்.

இந்த வருட டாப் 5 நாயகிகள் யார் தெரியுமா?? வெளியான லிஸ்ட்!!

விஜய் உடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பது தான் இவரின் ஆசையாம். இவருக்கு தற்போது நிச்சயம் நடந்துள்ளது. அந்த புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் தளபதி 65 அப்டேட் வெளியானது. அதில் ராஷ்மிகா மந்தனா தான் நாயகி என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் ராஷ்மிகா தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அதில் அவர் ஜிம் உடையில் வெளியிட்ட புகைப்படம் காட்டுத்தீயாய் பரவியது. அந்த புகைப்படம் தான் இவருக்கு இப்பொழுது மிகப்பெரிய வாய்ப்பையும் பெற்று தந்துள்ளது.

அதாவது பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஹிந்தியில் சித்தார்த் மல்கோத்ரா நடித்து வரும் மஞ்சு மிசன் படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here