Saturday, May 4, 2024

கமலின் “சீரமைப்போம் தமிழகத்தை” பிரச்சாரத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சி – கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!!

Must Read

நடிகர் கமல் ஹாசன் ஆரம்பித்துள்ள புதிய கட்சியில் மற்ற காட்சிகளை போலவே ஆடல் மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்று இருப்பது பலரையும் அதிருப்தி அடைய வைத்துள்ளது. அதே போல் இவரும் மற்ற கட்சிகளை போலவே தான் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கட்சி செயல்பாடுகள்:

அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து பணிகளிலும் அனைத்து கட்சிகளும் இறங்கியுள்ளது. இந்த தேர்தல் பல வித எதிர்பார்ப்புகளுடன் உள்ளது. காரணம், நடிகர்களான ரஜினிகாந்த மற்றும் கமல் ஹாசன் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் கமல் தன்னை முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் வாரிசு என்று தன்னை குறிப்பிடுகிறார்.

8வது முறையாக இணையும் செல்வராகவன் & யுவன் கூட்டணி – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கமல் முதல் கட்டமாக தனது தேர்தல் பிரச்சாரத்தை “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயருடன் ஆரம்பித்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க அவரது கட்சி மேடையில் சிலர் “நான் சூடான மோஹினி” என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அவர் மேல் நம்பிக்கையினை வைத்தவர்கள் இந்த சம்பவத்தால் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி அனைவர் மத்தியிலும் பேசப்பட்டு வருகின்றது. சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். மற்ற அரசியல் கட்சிகளை இவரும் அதே பணியினை பின்பற்றுகிறார் என்று அனைவரும் அங்கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -