மாலை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டம் – ஜல்லிக்கட்டு வீரர்கள் குஷி!!

0
Alanganallur Jallikattu

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதால் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனை வெளிப்படுத்தும் விதமாக மாடுகளுக்கு மாலை அணிவித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

ஜல்லிக்கட்டு :

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தமிழனின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படும். தற்போது கொரோனா பரவலின் காரணமாக நிகழ்ச்சிகள் எதுவும் நடத்த அரசு அனுமதி வழங்குவதில்லை. எனவே அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா? என்று அனைவர்க்கும் சந்தேகமாகவே இருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எனவே தற்போது தமிழக அரசு ஜல்லிக்கட்டை பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் அரசு சொல்லும் விதிமுறைகளை பின் பற்றி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்குகிறது என்று கூறியுள்ளது. இதனால் தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு மிகவும் பிரம்மண்டமாக நடைபெறும் புதுக்கோட்டையில் இந்த அறிவிப்பின் மூலம் மக்கள் செம குஷி அடைந்துள்ளனர். அங்கு அனைவரும் ஸ்வீட் வழங்கி கொண்டாடி வருகிறார்கள். நடந்து செல்பவர்கள் என அனைவர்க்கும் இனிப்பு வழங்கி கொண்டாடுகின்றனர்.

சென்னை காவல்துறை அதிகாரிகளின் தீவிர முயற்சி – ரூ.1 கோடி மதிப்பிலான 826 செல்போன்கள் மீட்பு!!

மேலும் அங்கு அரசு மகளிர் கல்லூரிக்கு எதிரே இருக்கும் ஜல்லிக்கட்டு மாட்டு சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடி வருகிறார்கள். மேலும் இதனை ரசிகர்கள் காணலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. ஆனால் மக்கள் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் மேலும் அனைவரும் சமூகஇடைவெளி பின் பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here