சென்னை காவல்துறை அதிகாரிகளின் தீவிர முயற்சி – ரூ.1 கோடி மதிப்பிலான 826 செல்போன்கள் மீட்பு!!

0

கடந்த 3 மாதங்களில் மட்டும் சென்னையில் 1 கோடி மதிப்புள்ள 800க்கும் மேற்பட்ட செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் மீண்டும் தரபட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளின் தீவிர முயற்சி காரணமாக இது சாத்தியமாகியுள்ளது.

செல்போன்கள் பறிப்பு:

சென்னையில் கடந்த 3 மாதங்களில் மட்டும் பல செல்போன் பறிப்பு வழக்குகள் பதிவாகியிருந்தது. சென்னை காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் இதனை தடுக்க உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து செல்போன்கள் காணவில்லை என்றும் பறிப்பு சம்பவங்கள் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அதிகாரிகள் உடனடியாக விசாரித்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சைபர் கிரைம் மற்றும் குற்றவியல் அதிகாரிகள் இந்த வழக்குகளை தீவிரமாக விசாரித்துள்ளனர். செல்போன்களின் அடையாள குறீயிடு எண்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உதவியோடு தற்போது ரூ.1 கோடி மதிப்புடைய 863 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. செல்போன்களின் உரிமையாளர்களை ஒன்றிணைத்து எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நிகழ்ச்சியாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் செல்போன்களின் உரிமையாளர்களிடம் போன்களை ஒப்படைத்தார்.

மாநில லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்??

பின், நிகழ்ச்சியில் அவர் பேசும் போது, “செல்போன்கள் ஒருவரின் நினைவுகளை வைத்திருக்கும். அதனால் மக்கள் அதனை கவனமுடன் கையாள வேண்டும் என்றும் அதனை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். செல்போன் பறிப்பு என்பதனை சிறிய விஷயமாக பார்க்கக் கூடாது, அது மிக பெரிய குற்றத்திற்கு கூட வழிவகுக்கும்” இவ்வாறாக தெரிவித்துள்ளார். செல்போன்களை பெற்றவர்கள் தங்கள் பொருள் கிடைக்கும் என்று நம்பவில்லை என்றும் காவலர்களின் சீரிய முயற்சிக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here