Friday, April 26, 2024

1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த அஷ்வினின் “கிரிமினல் கிரஷ்” பாடல் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

Must Read

ஒரே நாளில் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலமாக பிரபலம் அடைந்த அஷ்வினின் “கிரிமினல் கிரஷ்” ஆல்பம் பாடல் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை செய்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

“குக் வித் கோமாளி” பிரபலம்

தமிழ் சினிமாவில் தற்போது சாதித்து வரும் பலரும் ஒரு காலத்தில் மிகவும் சிறிய ஆசையுடன் தான் சென்னை வருவார்கள். அப்படி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சினிமா துறையின் மேல் இருந்த காதல் காரணமாக கோவை மாநகரில் இருந்து சென்னைக்கு பல கனவுகளுடன் வந்தவர் தான், அஸ்வின். இவர் முதன் முதலாக “ஓ காதல் கண்மணி” திரைப்படத்தின் ஒரு காட்சியில் நடித்திருப்பார். இது பலரும் அறிந்திராத தகவல் என்றே கூறலாம்.

துக்கம் தொண்டையை அடைத்து விட்டது – கதறும் வடிவேல்!!

அதன் பிறகு அஸ்வின் பல குறும்படங்களில் நடித்துள்ளார். இவர் நன்றாக நடித்திருந்தாலும், இவருக்கு என்று தனி அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும். இப்படியாக இருக்க, இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி தான். தனது சமையல் திறன் காரணமாக பலரையும் தன் பால் ஈர்த்தார் என்றே கூறலாம். இப்படியாக இருக்க, தற்போது பல ஆல்பம் பாடல்களில் நடித்து வருகிறார். “குட்டி பட்டாசு” என்ற ஆல்பம் பாடலில் நடித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த பாடல் தற்போது 10 மில்லியன் பார்வையாளர்க்ளையும் கடந்து விட்டது. இப்படியாக இருக்க, இசை அமைப்பாளர் அனிருத்தின் இசையில் “கிரிமினல் கிரஷ்” என்ற ஆல்பம் பாடல் நேற்று வெளியானது. வெளி வந்த ஒரே நாளில் 1 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்த சாதனை புரிந்துள்ளது. அதே போல் யூடியூபில் இன்று ட்ரெண்டாகியும் வருகின்றது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தேதி அறிவிப்பு..  வெளியான முக்கிய தகவல்!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நடப்பு 2023-24 ஆம் கல்வியாண்டு முடிவடைய இருப்பதால், பள்ளி மாணவர்களுக்கான இறுதி தேர்வுகள், கோடை விடுமுறை தினங்கள் திட்டமிடப்பட்டு வருகிறது....
- Advertisement -

More Articles Like This

- Advertisement -