இந்தியாவிற்கு வருகிறது 6 ரபேல் போர் விமானங்கள் – பலமடையும் விமானப்படை!!

0

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டஸால்ட் நிறுவனத்திடம் ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. தற்போது அந்த வகையில் இந்தியாவிற்கு பிரான்சிலிருந்து 6 ரபேல் போர் விமானங்கள் வரவுள்ளது.

ரபேல் போர் விமானம்:

இந்திய விமானப்படையை பலப்படுத்துவதற்காக பிரான்ஸ் நாட்டில் உள்ள டஸால்ட் நிறுவனத்திடம் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. மேலும் அதற்காக ரூ.56 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் ஏற்கனவே இந்தியாவிற்கு 11 ரபேல் விமானங்கள் வந்துள்ளது. அவை அனைத்தும் அரியானாவில் உள்ள அம்பாலா விமான தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் இந்திய விமானப்படை தலைவர் ராகேஷ் படவுரியா வருகிற ஏப்ரல் 21ம் தேதி தென்மேற்கு பிரான்சில் உள்ள மெரிக்னாக் போர்டோ விமான தளத்திற்கு சென்று அங்கிருக்கு 6 ரபேல் விமானங்களை கொடி அசைத்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்கிறார்.

துக்கம் தொண்டையை அடைத்து விட்டது – கதறும் வடிவேல்!!

அந்த 6 விமானங்கள் மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கும் ஹசிமரா விமானப்படை தளத்தில் நிறுத்தப்படவுள்ளன. இதனால் தற்போது இந்தியாவில் உள்ள ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிக்கும். அது மட்டுமல்லாமல் இந்தியாவின் விமான படை மேலும் பலமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here