வெங்கட் பட் நீங்களும் கார் வாங்கிட்டீங்களா?? குக் வித் கோமாளி பிரபலங்கள் செய்யும் அட்டகாசங்கள்!!

0
cwc

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கோமாளிகள் புகழ், சரத் மற்றும் ரக்சன் ஆகியோர் புது பிஎம்டபிள்யூ கார் ஒன்றில் ஜாலியாக ரைடு சென்றுள்ளனர். அந்த புதிய கார் குக் வித் கோமாளி பிரபலத்துக்கு சொந்தமானதாம்.

குக் வித் கோமாளி

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ஷோவாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் போட்டியளாராக சினிமா பிரபலங்கள், சீரியல் பிரபலங்கள் என எட்டு பேர் கலந்து கொண்டனர். அதில் குக்குகளை இம்சை செய்யும் கோமாளிகளாக விஜய் டிவி நட்சத்திரங்கள் புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, சுனிதா ஆகியோர் பங்குபெற்று வருகின்றனர். சமையலில் நகைச்சுவையை புகுத்தி ஒளிபரப்பு செய்யப்படும் குக் வித் கோமாளி ஷோ பல்வேறு நாடுகளை கடந்து ஹிட் அடித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த ஐந்து மாதங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சமயத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நட்சத்திரம் புகழ் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். விஜய் டிவியில் இத்தனை ஆண்டு காலம் உழைத்து வந்த புகழ் தற்போது தான் புதிய கார் வாங்கினார். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் பலர் வலைதளங்கள் வழியாக புகழுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

புதுவையில் வாட்ஸ்ஆப் பிரச்சாரத்தால் ஏற்பட்ட சர்ச்சை?? ஆதார் மையத்தை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!!

தொடர்ந்து நடிகர் சிவகார்த்திக்கேயன், சந்தானம் உள்ளிட்ட சில திரையுலக பிரபலங்களும் புகழுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இப்படி இருக்க குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஜட்ஜ்ஜாக வரும் செஃப் வெங்கடேஷ் பட் தற்போது புதிய பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த புதிய காரில் புகழ், சரத், ரக்சன், செஃப் வெங்கடேஷ் பட் என அனைவரும் ஒரு ஜாலியான ரைடு சென்றுள்ளனர். இந்த வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here