புதுவையில் வாட்ஸ்ஆப் பிரச்சாரத்தால் ஏற்பட்ட சர்ச்சை?? ஆதார் மையத்தை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!!

0

புதுவையில் சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக கட்சி வாட்ஸ் ஆப் மெசேஜ் மூலம் பிரச்சாரம் செய்தது. தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. தற்போது புதுவையில் தேர்தல் நடைபெறுமா என்ற சிக்கலும் எழுந்துள்ளது.

புதுவை:

புதுவையில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அங்கு தற்போது தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. மேலும் அங்கு தற்போது பரபரப்பை அதிகப்படுத்தும் வகையில் ஓர் சர்ச்சை நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால் அங்கு பாஜக கட்சியினர் வாக்காளர்களின் போன் நபரை எடுத்து வாட்ஸ் ஆப் மூலம் பிரச்சாரம் செய்துள்ளார்கள். இந்த செயல் அங்கு பரபரப்பை கிளப்பியது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்போது இதனை விசாரித்த நீதிபதி கடுமையாக கோபப்பட்டு தேர்தல் ஆணையம் ஆளும் கட்சி என்பதால் நடவடிக்கை எடுக்க பயப்படுகிறதா என்று கடுமையாக சாடியது. மேலும் இதுகுறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தற்போது தேர்தல் ஆணையம் இதுகுறித்து தெரிவித்ததாவது, இதுகுறித்து சைபர் கிரைம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

#INDvsENG 2வது ஒருநாள் போட்டி – கோஹ்லி, ராகுல் நிதான ஆட்டம்!இந்தியா 112/2!!

விசாரணையின் முடிவில் தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் பாஜக இதற்காக எந்த முன் அனுமதியும் பெறவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தற்போது சிலர் பாஜகவை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி வந்த நிலையில் விசாரணையின் முடிவு இல்லாமல் பாஜகவை இடைநீக்கம் செய்ய முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

BJP
BJP

தற்போது இதுகுறித்து நீதிமன்றம் கூறியதாவது, வாக்காளர்கள் நம்பரை பாஜகவினர் எப்படி எடுத்தார்கள் என்பது குறித்து ஆதார் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. தற்போது இந்த சர்ச்சையினால் இதற்கு முடிவு கிடைக்கும் வகையில் புதுவையில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒத்திவைக்க வேண்டும் என்று சிலர் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here